சர்க்கரைப் பொங்கல்: மணக்க மணக்கச் செய்ய சில எளிய குறிப்புகள்!

Pongal recipes
Sugar Pongal
Published on

ர்க்கரைப் பொங்கலுக்கு வெல்லம் சேர்க்கும்போது வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டிய பின் சேர்த்தால் பொங்கலில் மண் நற நறக்காது.

சர்க்கரை பொங்கலுக்கு வெல்லப்பாகு காய்ச்சும்போது அதில் நெய் கலந்துவிட்டால் சுவையும் மணமும் கூடும். நெய்யும் குறைவாக செலவாகும்.

கொப்பரைத் தேங்காயை துருவி திராட்சை, முந்திரியை அரைத்துச் சர்க்கரை பொங்கலில் கலந்தால் சுவையுடன், மணமாக அபாரமாக இருக்கும்.

சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது வெல்லத்தைக் குறைத்துக் கொண்டு டைமண்ட் கற்கண்டு, மில்க்மெய்ட் மூன்று டீஸ்பூன், சிறிதளவு தேங்காய்ப்பால் சேர்த்து கிளற ரிச்சான சுவையில் அசத்தும் பொங்கல்.

சர்க்கரைப் பொங்கலில் தேங்காய் துருவியோ அல்லது சிறு சிறு துண்டுகளாக நறுக்கியோதான் சேர்ப்போம். அப்படி நேரடியாக சேர்க்காமல், சிறிது நெய்யில் தேங்காயை வதக்கி சேர்த்தால் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும். முந்திரி பருப்பு அதிகம் சேர்க்க தேவை இருக்காது.

சர்க்கரைப் பொங்கலில் நன்கு கணிந்த மூன்று பலாச்சுளைகளை பாலில் அரைத்து கலந்தால் சுவையாக இருக்கும்.

சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது சிறிது ஜாதிக்காய்ப் பொடி சேர்த்து செய்தால் சுவையும் மணமும் அபாரமாக இருக்கும். இறுதியாக முந்திரி, திராட்சையை வறுத்து சேர்த்த பின் கால் கப் அளவு டைமன்ட் கல்கண்டு சேர்த்து கலக்கலாம்.

வீட்டில் வைக்கும் சர்க்கரை பொங்கல் கோயிலில் தரும் பிரசாதம் போல சுவையும், மணமாக இருக்க வேண்டுமா? சர்க்கரை பொங்கலை செய்து இறக்கும்போது ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம் சேர்த்தால் சுவையில் அசத்தும்.

சக்கரை பொங்கல் செய்யும்போது தண்ணீரில் சிறிது நெய் அல்லது டால்டா விட்டு பின், அதனுடன் அரிசி களைந்து ஊறிய பின்பு போட்டால் பொங்கல் ஒரு துளிகூட பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்.

சர்க்கரை பொங்கல் செய்யும்போது தண்ணீருடன், பாலும் சேர்த்து வேகவைத்தால் சர்க்கரைப் பொங்கல் சுவையாகவும், குழைவாகவும் வரும்.

சர்க்கரைப் பொங்கல் வைக்கும்போது ஏலக்காய் தூளுடன் இரண்டு சிட்டிகை சுக்கு பொடியும் சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
இந்த பொங்கலுக்கு கடையில வாங்காதீங்க... வீட்டிலேயே ஈஸியா செய்ற 'மொறு மொறு' முறுக்கு!
Pongal recipes

கரும்புச்சாற்றில் பொங்கல் வைக்கும்போது கரும்பு சாற்றை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கவிட்டு வடிகட்டியபின் பொங்கலில் கலந்தால் கரும்புச் சக்கை, தூசு, முதலியன நீங்கி ருசியாக இருக்கும்.

சர்க்கரை பொங்கல் செய்து நன்கு இறுகிவிட்டால் அதை மீண்டும் தளர்வாதற்கு பால் அல்லது தண்ணீர் ஊற்றி கிளறலாம். அதற்கு பதிலாக சிறிது தேங்காய்ப் பால் சேர்த்து கிளறிவிட்டால் சுவை இன்னும் அருமையாக இருக்கும்.

தைப்பொங்கலன்று சர்க்கரைப் பொங்கல் செய்து சூரியனுக்கு படைத்து அருளைப் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com