Sugarcane Recipe
Sugarcane Recipe

வீட்டில் கரும்பு அதிகமா இருக்கா? கவலைய விடுங்க... இப்படி செஞ்சு அசத்துங்க!

Published on

பொங்கல் பண்டிகைக்கு வாங்கிய கரும்பு வீட்டில் நிறைய இருக்கும். அதை என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பவர்களுக்கு இதோ சூப்பரான (Sugarcane Recipe) ரெசிபி.

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் திருவிழா முன்னோர்களால் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தைத்திருநாளான இந்த நாளில் விவசாயிகள் அறுவடை செய்து சூரியனுக்கு படைப்பார்கள். இது நாளடைவில் விழாவாக மாறி சூரியனுக்கு பொங்கல் படைக்கும் நாளாக மாறியது. இது வட இந்தியாவில் மகர சங்கராந்தியாக கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவில் அனைவரும் கரும்பு உண்ணுவது வழக்கம். தற்போது ரேஷன் கடைகளிலேயே கரும்பு விநியோகிக்கப்படுகிறது. பொங்கல் வைத்தவுடனே அனைவரும் கரும்பு கடித்து சாப்பிடுவார்கள். என்னதான் கரும்பு பிரியராக இருந்தாலும் கூட ஒரு கரும்பு தான் சாப்பிட முடியும். அப்படி பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில், பலரது வீடுகளில் கரும்பு மிஞ்சியிருக்கும். அது காய்ந்த பிறகு குப்பைக்கு போடுவதற்கு பதிலாக இதை பல வகைகளில் ஸ்வீட் வகைகளாக செய்து அசத்தலாம் வாங்க.

இதையும் படியுங்கள்:
பஞ்சாபி ஸ்டைல் ஆலு மட்டார்: அசத்தலான சுவையில் ஒரு சிம்பிள் ரெசிபி!
Sugarcane Recipe

கரும்பு கொழுக்கட்டை:

தேவையான பொருட்கள்:

கரும்பு சாறு கோதுமை மாவு உப்பு தேங்காய் பீஸ்கள் நாட்டு சர்க்கரை செய்முறை: கரும்புகளை குட்டி குட்டியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு சாறாக மாற்றி எடுத்து வைத்து கொள்ளவும். இதை தவிர கோதுமை மாவு 2 கப், ஒரு சிட்டிகை உப்பு, ஒரு கப் நாட்டு சர்க்கரை, தேங்காய் பீஸ்கள் சேர்ந்து கரும்பு சாறால் மாவை போளி பதத்திற்கு பிசைந்து வைத்து கொள்ளவும். பிறகு சிறிது சிறிதாக கொழுக்கட்டை ஷேப்பிற்கு உருட்டி இட்லி தட்டில் வைத்து வேகவைத்து எடுத்தால், சுவையான, ஹெல்தியான கரும்பு கொழுக்கட்டை ரெடியாகிவிடும்.

கரும்பு அல்வா:

தேவையான பொருட்கள்:

கரும்பு வெல்லம் - தேவையான அளவு முந்திரி, உலர் திராட்சை - தேவையான அளவு கோதுமை மாவு - 1 கப் கார்ன் ப்ளவர் மாவு - 1 கப்

செய்முறை:

வீட்டில் இருக்கும் கரும்புகளை சாறாக எடுத்து கொள்ளவும். பீஸ் பீஸாக வெட்டி மிக்ஸியில் போட்டு அரைத்தால் கூட சாறு கிடைத்துவிடும். இதை தொடர்ந்து வெல்லத்தை வானலியில் போட்டு கொதிக்க விட வேண்டும். அது தண்ணீராக மாறிய பிறகு தனியாக எடுத்து வைத்துகொள்ள வேண்டும். கரைந்தால் மட்டும் போதும். பிசுபிசு தன்மை வரை காத்திருக்க தேவையில்லை.

இதையும் படியுங்கள்:
இட்லி குக்கரைத் தொடவே வேண்டாம்! 'சோம்பேறி'களுக்கான ஒரு சூப்பர் டின்னர் இது!
Sugarcane Recipe

பிறகு நெய்யில் முந்திரி, உலர் திராட்சை போட்டு வதக்கி கொள்ளவும். அதை தனியாக எடுத்து வைத்துவிட்டு அதில், கரும்பு சாறை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அது கொதித்து கொண்டு இருக்கும்போதே, கோதுமை மாவையும், கார்ன் ப்ளவர் மாவையும் சேர்த்து கட்டி கட்டியாகாமல் கரைக்க வேண்டும். நன்றாக கரைந்து கூல் பதத்திற்கு வந்த பிறகு வெல்ல பாகுவை ஊற்றி நன்கு கிளற வேண்டும். அது அல்வா பதத்திற்கு வந்த பிறகு கடைசியாக வறுத்து வைத்திருக்கும் முந்திரி, திராட்சையை போட்டு கிளறினால் டேஸ்டியான கரும்பு அல்வா ரெடி. சூடாக சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.

கரும்பு டீ:

தேவையான பொருட்கள்:

கரும்பு சாறு

டீத்தூள்

பால் தேவையான அளவு

செய்முறை:

கரும்பு பீஸ்களை வெட்டி அரைத்து சாறாக எடுத்து கொள்ளவும், அந்த சாறை நன்கு கொதிக்கவிட்டால், கம்பி பதத்திற்கு வரும் அந்த நேரத்தில அரை டம்ளர் தண்ணீர் 2 ஸ்பூன் டீத்தூள் போட்டு கொதிக்கவிடவும், அதன் பிறகு வழக்கம் போல் டீ போடுவதற்கு ஏற்ப பாலை ஊற்றி கொதிக்க வைக்கவும். அவ்வளவுதான் அட்டகாசமாக டீ ரெடி, சுவை வேற லெவலில் இருக்கும். மாலை நேரத்தில் சூடாக குடிக்க இதமாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com