கோடைக்கு இதமாய் பூசணிக்காய் மோர்க்குழம்பு - மக்கானா ப்ரூட் கஸ்டர்ட் ரெசிபிஸ்!

pumpkin Mor Kuzhambu-makhana fruit custard recipes!
pumpkin Mor Kuzhambu-makhana fruit custard recipes!
Published on

ன்றைக்கு சுவையான பூசணிக்காய் மோர்க்குழம்பு மற்றும் மக்கானா ப்ரூட் கஸ்டர்ட் ரெசிபியை சிம்பிளாக வீட்டிலேயே எப்படிசெய்யறதுன்னு பார்ப்போம்.

பூசணிக்காய் மோர்க்குழம்பு செய்ய தேவையான பொருட்கள்.

பூசணிக்காய்-1 கப்

துவரம் பருப்பு-1 ½ தேக்கரண்டி

பச்சரிசி-1 ½ தேக்கரண்டி

தேங்காய் எண்ணெய்-1 குழிக்கரண்டி

கடுகு-1 தேக்கரண்டி

சீரகம்-1 தேக்கரண்டி

பச்சை மிளகாய்-2

வரமிளகாய்-2

கருவேப்பிலை-சிறிதளவு

இஞ்சி- 1 துண்டு

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி

பெருங்காயத்தூள் -சிறிதளவு

உப்பு-தேவையான அளவு

பேஸ்ட் செய்ய,

தேங்காய்-1 கைப்பிடி

பச்சை மிளகாய்-2

கருவேப்பிலை-சிறிதளவு

சீரகம்-1 தேக்கரண்டி

தயிர்-1 கப்

கொத்தமல்லி-சிறிதளவு

பூசணிக்காய் மோர்க்குழம்பு செய்முறை விளக்கம்.

முதலில் பூசணிக்காயை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு பவுலில் 1 ½ தேக்கரண்டி துவரம் பருப்பு, 1 ½ தேக்கரண்டி பச்சரிசியை ஊற வைத்துக் கொள்ளவும்.

இப்போது ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் 1 குழிக்கரண்டி ஊற்றி அதில் கடுகு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, வரமிளகாய் 2, பச்சை மிளகாய் 2, கருவேப்பிலை சிறிதளவு, வெட்டி வைத்த பூசணிக்காய் 1கப், நீளமாக நறுக்கிய இஞ்சி 1 துண்டு, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, பெருங்காயத்தூள் சிறிதளவு, உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக கலந்துவிடவும். இதில் தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடிப் போட்டு 10 நிமிடம் நன்றாக வேக விடவும்.

இப்போது தேங்காய் 1 கைப்பிடி, பச்சை மிளகாய் 1, கருவேப்பிலை சிறிதளவு, சீரகம் 1 தேக்கரண்டி, ஊறவைத்த துவரம் பருப்பு, பச்சரிசியை சேர்த்து பேஸ்டாக அரைத்து அதையும் இத்துடன் சேர்த்துக் கொள்ளவும். இதில் தண்ணீர் சிறிது சேர்த்து கொதிக்க விடவும். கடைசியாக தயிர் 1 கப் சேர்த்துவிட்டு கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான பூசணிக்காய் மோர்க்குழம்பு தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

மக்கானா ப்ரூட் கஸ்டர்ட் செய்ய தேவையான பொருட்கள்.

மக்கானா-10

பாதாம்-10

முந்திரி-10

குங்குமப்பூ-1 சிட்டிகை

பால்-1 கப்

தேன்-1 தேக்கரண்டி

கன்டென்ஸ்ட் மில்க்-1/2 கப்

சப்போட்டா-1 கப்

பச்சை திராட்சை-1 கப்

மாதுளம்பழம்-1கப்

ஆப்பிள்-1 கப்

மக்கானா ப்ரூட் கஸ்டர்ட் செய்முறை விளக்கம்.

முதலில் பவுலில் 10 மக்கானா, 10 முந்திரி, 10 பாதம், 1 சிட்டிகை குங்குமப்பூ சேர்த்து 1 கப் சூடான பால் சேர்த்து 15 நிமிடம் நன்றாக ஊறவிட்டு அதை மிக்ஸியில் சேர்த்து 1 தேக்கரண்டி தேன் விட்டு நல்ல பேஸ்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இப்போது அரைத்து வைத்த மக்கானாவை பவுலில் சேர்த்து அத்துடன் ½ கப் கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்துவிட்டு அதில் நறுக்கி வைத்த சப்போட்டா 1 கப், பச்சை திராட்சை 1 கப், மாதுளம்பழம் 1 கப், ஆப்பிள் 1 கப் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு 10 நிமிடம் ப்ரிட்ஜில் வைத்து எடுத்து கண்ணாடி டம்ளரில் பரிமாறினால் இந்த கோடைக்கு குடிக்க சூப்பராக இருக்கும். நீங்களும் இதை உங்கள் வீட்டில் ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

இதையும் படியுங்கள்:
பேச்சுலர் ரெசிபி: வெள்ளரிக்காய் ரைஸ்-முருங்கைப்பொடி உருளை வறுவல் செய்யலாம் வாங்க!
pumpkin Mor Kuzhambu-makhana fruit custard recipes!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com