சம்மர் ஸ்பெஷல் 3 தாளிப்பு வடகம்! இதுவரை ருசிக்காத சுவையில் பண்ணி தான் பாருங்களேன்!

vadagam
Thalippu vadagam recipe

அடிக்கும் வெய்யிலை நன்கு பயன்படுத்தி வடாம், வத்தல், தாளிப்பு வடகம், மோர் மிளகாய் என செய்து வைத்துக் கொண்டால் ஒரு வருடத்திற்கு கவலைப்படாமல் தேவைப்படும் சமயம் எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம். வீட்டிலேயே செய்வதால் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கும். அதிக விலை கொடுத்து கடையில் வாங்க வேண்டிய அவசியமும் இருக்காது.

1. வேப்பம்பூ தாளிப்பு வடகம்:

Vadagam
Veppam poo thalippu vadagam

தேவையானவை:

  • வேப்பம்பூ 2 கப்

  • உளுத்தம் பருப்பு 1/2 கப்

  • துவரம் பருப்பு 1/2 கப்

  • சீரகம் 2 ஸ்பூன்

  • கடுகு 2 ஸ்பூன்

  • சின்ன வெங்காயம் 1/2 கிலோ 

  • உப்பு  1/4 கப்

  • கறிவேப்பிலை சிறிது

  • மிளகாய் தூள் 2 ஸ்பூன்

செய்முறை:

வேப்பம்பூவை நிழலில் காயவைத்து தூசி தும்புகள் நீக்கி எடுத்துக் கொள்ளவும்.

மேற்குறிப்பிட்ட எல்லா பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து கால் கப் நல்லெண்ணெய் சேர்த்து சின்ன சின்ன வடைகளாக தட்டி வெயிலில் நான்கு நாட்கள் நன்கு காய விட்டு எடுக்க சுவையான தாளிப்பு வடகம் ரெடி.

இதனை ஒரு டப்பாவில் போட்டு பத்திரப்படுத்தி தேவைப்படும் சமயம் ஒன்றிரண்டு வடைகளை நல்லெண்ணையில் தாளித்து புளிக்குழம்பு, சாம்பார் ஆகியவற்றில் சேர்க்க ருசியாக இருக்கும். அதே போல் சிறிதளவு நெய் விட்டு 2 வடைகளை சேர்த்து நன்கு வறுத்து ரசத்தில் தாளித்துக் கொட்ட ரசம் மணக்கும். இதனை ஒரு ஆண்டு முழுவதும் வைத்து உபயோகிக்கலாம்.

2. பிரண்டை தாளிப்பு வடகம்:

Vadagam
Pirandai thalippu vadagam

தேவையானவை:

  • பிரண்டை 2 கப்

  • உளுத்தம் பருப்பு 1/2 கப்

  • துவரம் பருப்பு 1/2 கப்

  • சீரகம் 2 ஸ்பூன்

  • கடுகு 2 ஸ்பூன்

  • சின்ன வெங்காயம் 1/2 கிலோ 

  • உப்பு  1/4 கப்

  • கறிவேப்பிலை சிறிது

  • மிளகாய் தூள் 2 ஸ்பூன்

செய்முறை:

பிரண்டையில் செய்வதாக இருந்தால் அவற்றின் தோல் நீக்கி பொடியாக அரிந்து சிறிது நல்லெண்ணெய் விட்டு வதக்கி மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை சேர்த்து கலந்து வடைகளாக தட்டி வெயிலில் காய வைத்து பயன்படுத்தலாம்.

புளிக்குழம்பு, வத்த குழம்பு, சாம்பார் ஆகியவற்றின் தாளிப்புக்கு உபயோகிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
ஒரு வருடத்திற்கு கெட்டுப் போகாத 3 வடாம் ரெசிபிகள்! இப்போதே செய்துகொள்ளுங்கள்!
vadagam

3. வாழைப்பூ தாளிப்பு வடகம்:

தேவையானவை:

  • வாழைப்பூ 2 கப்

  • உளுத்தம் பருப்பு 1/2 கப்

  • துவரம் பருப்பு 1/2 கப்

  • சீரகம் 2 ஸ்பூன்

  • கடுகு 2 ஸ்பூன்

  • சின்ன வெங்காயம் 1/2 கிலோ 

  • உப்பு  1/4 கப்

  • கறிவேப்பிலை சிறிது

  • மிளகாய் தூள் 2 ஸ்பூன்

செய்முறை:

வாழைப்பூவில் கள்ளனை எடுத்து பொடியாக நறுக்கி சிறிது வதக்கிய பின் மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை சேர்த்து வதக்கி நன்கு பிசைந்து வடைகளாக தட்டி வெயிலில் நன்கு காயவைத்து தேவைப்படும் சமயம் தாளிப்புக்கு உபயோகிக்கலாம்.

பொரிச்ச குழம்பு, புளிவிட்ட கூட்டு, வத்த குழம்பு ஆகியவற்றில் போட மிகவும் ருசியாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com