வெயிலுக்கு இதமான விருந்து: பால் சேமியா ஃபலூடா & மாங்காய் ஐஸ்கிரீம்!

A pleasant treat for the sun
A pleasant treat for the sun
கல்பனா ராஜகோபால்

கல்பனா எனும் நான் பள்ளிப் பருவத்திலிருந்தே என்னுள் இருக்கும் தமிழார்வத்தால் புத்தகம் வாசிப்பதிலும் கவிதை எழுதுவதிலும் அதிக ஈடுபாடு கொண்டுள்ளேன். என் கவிதைக்கு முன்னாள் ஜனாதிபதி திரு அப்துல் கலாம் ஐயா அவர்களிடம் இருந்து வாழ்த்துக் கடிதம் பெற்று உள்ளேன். என் கவிதை முதன் முதலில் மங்கையர் மலர் வெள்ளி விழா மலரில் வெளியாகி அதற்கு பரிசும் பெற்றேன். பணி ஓய்வுக்கு பிறகு என் எழுத்துப் பணியை கல்கி ஆன்லைனில் தொடந்துள்ளேன். எனக்கு வாய்ப்பு நல்கிய. கல்கிக் குழுமத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

Updated on: 

கொஞ்சம் பாலும் சேமியாவும் இருந்தாலே வெயிலுக்கு ஜில்லுனு ஃபலூடா தயார் செய்யலாமா … எப்படி தெரியுமா?

பால் சேமியா ஃபலூடா

தேவையான பொருட்கள்:

காய்ச்சி ஆறவைத்த பால் – 2 கப்

சேமியா – ¼ கப்

சப்ஜா விதைகள் – 1 டீஸ்பூன்

ரோஸ் சிரப் அல்லது குல்கந்த் – 2 டேபிள்ஸ்பூன்

சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன் (தேவைக்கேற்ப)

ஐஸ்கிரீம் (வெண்ணிலா / ஸ்ட்ராபெரி) – 1 ஸ்கூப்

முந்திரி, பாதாம், உலர் திராட்சை – 1 கப்

செய்முறை:

முதலில் சப்ஜா விதைகளை 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். மிதமான தீயில் சேமியாவை வெறும் பாத்திரத்தில் வறுத்து எடுக்கவும்.

பின்னர் வறுத்த சேமியாவை ஒரு கப் பாலில் வேகவைக்கவும். மீதமுள்ள பாலில் சர்க்கரை சேர்த்து கரையவிடவும்.

பிறகு அதில் வேகவைத்த சேமியா மற்றும் ஊறவைத்த சப்ஜா விதைகளை சேர்க்கவும். அதன் மீது ரோஸ் சிரப் அல்லது குல்கந்த் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை குளிரவைக்கவும்.

பரிமாறும்போது, உயரமான கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மேலே ஒரு ஸ்கூப் ஐஸ்கிரீம் வைக்கவும். மேலும் முந்திரி, பாதாம், உலர் திராட்சை போன்றவற்றை தூவி, ஸ்ட்ராவுடன் பரிமாறலாம்.

கச்சா மேங்கோ ஐஸ்கிரீம்

தேவையான பொருட்கள்:

துருவிய மாங்காய் – 1 கப்

பால் – 1 கப்

விப்ட் க்ரீம் – 1 கப்

சேமியா – 2 ஸ்பூன்

சர்க்கரை – 1 கப்

வெண்ணிலா எசன்ஸ் – ¼ ஸ்பூன்

இதையும் படியுங்கள்:
கர கரன்னு கீரை போண்டா... ஜில்லுனு ரோஸ், பாதாம் மில்க்! செஞ்சு அசத்துவோமா?
A pleasant treat for the sun

செய்முறை:

அடுப்பில் மிதமான தீயில் பாத்திரத்தை வைத்து பாலை காய்ச்சவும். பால் காய்ந்தவுடன் அதில் சேமியாவை சேர்த்து வேகவைத்து தனியாக எடுக்கவும்.

பிறகு மிக்ஸி ஜாரில் மாங்காய் துருவலை போட்டு, அதனுடன் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து கிரீமி பதமாக அரைக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் குளிர்ந்த விப்ட் க்ரீமை எடுத்து நன்றாக நுரைக்க அடிக்கவும்.

பிறகு அதனுடன் அரைத்த மாங்காய் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்கவும். அதோடு வெண்ணிலா எசன்ஸையும் சேர்க்கவும்.

இறுதியாக வேகவைத்த சேமியாவை சேர்த்து கலந்து, ஐஸ்கிரீம் மோல்டில் ஊற்றி ஃபிரீசரில் 8 மணி நேரம் வைக்கவும்.

சுவையான புளிப்பும் இனிப்பும் கலந்த கச்சா மேங்கோ ஐஸ்கிரீம் ரெடி!

logo
Kalki Online
kalkionline.com