சூப்பர் ஸ்நாக் ஜவ்வரிசி போண்டா ரெசிபி! 

Javvarisi bonda Recipe
Javvarisi bonda Recipe
Published on

இதுவரை ஜவ்வரிசியை பயன்படுத்தி நீங்கள் விதவிதமான உணவுகளை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால், ஜவ்வரிசி போண்டா செய்ததுண்டா?. ஜவ்வரிசி எனப்படும் சபுதானா கொண்டு தயாரிக்கப்படும் இந்த போண்டா, தனது தனித்துவமான சுவை மற்றும் மிருதுவான தன்மையால் அனைவரையும் கவர்ந்திழுக்கும். இந்தப் பதிவில் சுவையான ஜவ்வரிசி போண்டா எப்படி தயாரிப்பது எனப் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

  • ஜவ்வரிசி - 1 கப்

  • உருளைக்கிழங்கு - 2

  • கேரட் - 1

  • பச்சை மிளகாய் - 2

  • வெங்காயம் - 1

  • கொத்தமல்லி தழை - சிறிதளவு

  • கடுகு - 1/2 தேக்கரண்டி

  • உளுந்து - 1/4 தேக்கரண்டி

  • கறிவேப்பிலை - சிறிதளவு

  • மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி

  • கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி

  • உப்பு - தேவையான அளவு

  • எண்ணெய் - வறுக்க தேவையான அளவு

செய்முறை:

ஜவ்வரிசியை சுத்தம் செய்து 5 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் உருளைக்கிழங்கு, கேரட், பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை வேக வைத்து நன்கு மசித்துக் கொள்ளுங்கள். 

ஊறவைத்த ஜவ்வரிசியை வடிகட்டி, மசித்த காய்கறிகளுடன் சேர்த்து கலக்கவும். பின்னர், அதில் கொத்தமல்லித் தழை, கடுகு, உளுந்து, கருவேப்பிலை, மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்ற சேர்த்து நன்கு பிசைந்து மென்மையான மாவு பாதத்திற்கு தயார் செய்யவும். 

இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் சூப்பரான சுவையில் ஜவ்வரிசி போண்டா தயார். 

இதையும் படியுங்கள்:
கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப்-பிரியாணி கத்தரிக்காய் செய்யலாம் வாங்க!
Javvarisi bonda Recipe

ஜவ்வரிசி போண்டா ஆரோக்கியமான சிற்றுண்டிகளில் ஒன்றாகும். ஏனெனில், ஜவ்வரிசியில் கொழுப்புச் சத்து குறைவாக உள்ளதால், இதய நோய்கள் வரும் அபாயம் குறைகிறது. மேலும், ஜவ்வரிசியில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை சீராக வைத்திருக்க உதவும். இதில் இருக்கும் கார்போஹைட்ரேட்ஸ் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது. இத்துடன் இரும்பு பொட்டாசியம் போன்ற கனிமசத்துக்களும் ஜவ்வரிசியில் நிறைந்துள்ளதால், ஒரு ஆரோக்கியமான உணவாக இது இருக்கும். 

இந்த ஆரோக்கியமான ஜவ்வரிசி போண்டாவை வீட்டிலேயே எளிதாக செய்யலாம். இதில் பல்வேறு காய்கறி கலவைகளை சேர்த்து பல வகைகளில் உங்கள் விருப்பம் போல தயாரித்து சாப்பிட முடியும். எனவே, இந்த சுவையான போண்டாவை தயாரித்து உங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்து மகிழ்ச்சியாக உண்ணுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com