கர்நாடகா ஸ்பெஷல் சித்திரான்னா வித் பாலக் கார்ன் கிரேவி செய்யலாமா?

Karnataka special recipes in tamil
Image credit - archanaskitchen
நான்சி மலர்

வணக்கம். என் பெயர் நான்சி மலர். என்னைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதற்கு நன்றி. நான் B.E. Computer science Engineering முடித்துள்ளேன். எனக்கு சிறுவயது முதலே எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. ‘எழுத்துக்கள் மூலம் நம் எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த முடியும்’ என்று நம்புகிறேன். கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. Content writing துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. மோட்டிவேஷன், பயணம், ஆரோக்கியம், ஃபேஷன், ஆன்மீகம் போன்ற கட்டுரை எழுதுவதில் ஆர்வம் அதிகம். என்னுடைய எழுத்து வாசகர்களாகிய உங்களை கவர்ந்தால், அது எனக்கு மகிழ்ச்சியே! ‘ இன்னும் எதிர்காலத்தில் உங்கள் மனதில் என் எழுத்துக்கள் மூலம் இடம் பிடிப்பேன்’ என்று முழுமையாக நம்புகிறேன்.

Updated on

ன்றைக்கு சுவையான சித்திரான்னா மற்றும் பாலக் கார்ன் கிரேவி ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

சித்திரான்னா செய்ய தேவையான பொருட்கள்.

எழுமிச்சை-4

எண்ணெய்-1 குழிக்கரண்டி.

கடுகு-1 தேக்கரண்டி.

உளுந்து-1 தேக்கரண்டி.

கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.

காய்ந்த மிளகாய்-4

முந்திரி-10.

இஞ்சி-1 துண்டு.

பச்சை மிளகாய்-4

கருவேப்பிலை-சிறிதளவு.

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.

பெருங்காயத்தூள்-1 தேக்கரண்டி.

சர்க்கரை-1தேக்கரண்டி.

உப்பு-தேவையான அளவு.

துருவிய தேங்காய்-1கப்.

சாதம்-2 கப்.

சித்திரான்னா செய்முறை விளக்கம்.

முதலில் 4 எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். இப்போது கடாயில் எண்ணெய் 1 குழிக்கரண்டி ஊற்றி கடுகு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் 4, முந்திரி10, பொடியாக நறுக்கிய இஞ்சி 1 துண்டு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 4, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து நன்றாக வதக்கவும்.

இப்போது மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி, சர்க்கரை 1 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு, துருவிய தேங்காய் 1 கப் சேர்த்துக்கொள்ளவும். கடைசியாக பிழிந்து வைத்திருக்கும் எழுமிச்சை சாறை சேர்த்து கலந்துவிட்டு வடித்து ஆறவைத்த சாதம் 2 கப்பை இத்துடன் சேர்த்து நன்றாக கலந்துவிடவும். அவ்வளவு தான் டேஸ்டியான சித்திரான்னா தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

பாலக் கார்ன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்.

எண்ணெய்-2 தேக்கரண்டி.

பூண்டு-2.

வெங்காயம்-1

தக்காளி-1

உப்பு-தேவையான அளவு.

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

மல்லித்தூள்-1 தேக்கரண்டி.

கரம் மசாலா-1 தேக்கரண்டி.

கார்ன்-1/4 கப்.

பாலக் கீரை-2 கைப்பிடி.

பனீர்-50 கிராம்.

முந்திரி-6

இதையும் படியுங்கள்:
சூப்பர் சுவையில் ஆம்லெட் கிரேவி - காலிஃபிளவர் 65 செய்யலாம் வாங்க!
Karnataka special recipes in tamil

பாலக் கார்ன் கிரேவி செய்முறை விளக்கம்.

முதலில் ஃபேனில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய பூண்டு 2, சிறிதாக நறுக்கிய வெங்காயம் 1, சிறிதாக நறுக்கிய தக்காளி 1, உப்பு தேவையான அளவு, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, மல்லித்தூள் 1 தேக்கரண்டி, கரம் மசாலா 1 தேக்கரண்டி சேர்த்து கலந்துக்கொள்ளவும். இதில் சிறிது தண்ணீர் விட்டு 5 நிமிடம் மூடி வேகவிடவும்.

இப்போது இதில் கார்ன் ¼ கப், சிறிதாக நறுக்கி வைத்திருக்கும் பாலக்கீரை 2 கைப்பிடி சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது மிக்ஸியில் 50 கிராம் பனீர், 6 ஊற வைத்த முந்திரியை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கீரை நன்றாக வெந்ததும் அரைத்த பேஸ்ட்டை இத்துடன் சேர்த்து 5 நிமிடம் சுண்ட விட்டு  இறக்கவும். அவ்வளவுதான் சுவையான பாலக் கார்ன் கிரேவி தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

logo
Kalki Online
kalkionline.com