
சூப்பர் சுவையில், நொடி பொழுதில், நெய் பொடி இட்லி மற்றும் தக்காளி தொக்கு ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
நெய் பொடி இட்லி செய்ய தேவையான பொருட்கள்.
இட்லி-4
நெய்-தேவையான அளவு
கடுகு-1 தேக்கரண்டி
வெங்காயம்-1
கருவேப்பிலை-சிறிதளவு
கொத்தமல்லி-சிறிதளவு
காய்ந்த மிளகாய்-2
இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள்-1 தேக்கரண்டி
இட்லி பொடி-2 தேக்கரண்டி
நெய் பொடி இட்லி செய்முறை விளக்கம்.
முதலில் இட்லி 4 எடுத்துக் கொண்டு அதை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
இப்போது கடாயில் நெய் 1 தேக்கரண்டி சேர்த்து கடுகு 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் 2, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, கருவேப்பிலை சிறிதளவு, இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
இப்போது இதில் சிறிய துண்டாக வெட்டி வைத்திருக்கும் இட்லியை சேர்த்து அத்துடன் இட்லி பொடியை 2 தேக்கரண்டி தூவி விட்டு அத்துடன் பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி, நெய் 1 தேக்கரண்டி விட்டு கிளறி கடைசியாக கொத்தமல்லி சிறிதளவு தூவி இறக்கினால் நெய் பொடி இட்லி தயார்.
தக்காளி தொக்கு செய்ய தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய்-2 தேக்கரண்டி
கடுகு-1 தேக்கரண்டி
சீரகம்-1 தேக்கரண்டி
சோம்பு-1 தேக்கரண்டி
கருவேப்பிலை-சிறிதளவு
வெங்காயம்-1
தக்காளி-4
உப்பு-தேவையான அளவு
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி
மல்லித்தூள்-1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி
தக்காளி தொக்கு செய்முறை விளக்கம்.
முதலில் கடாயில் தேங்காய் எண்ணெய் 2 தேக்கரண்டி சேர்த்து அதில் கடுகு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, சோம்பு 1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து வதக்கவும். இத்துடன் நறுக்கிய பூண்டு 10, நறுக்கிய வெங்காயம் 1, நறுக்கிய தக்காளி 4 சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
இத்துடன் மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, மல்லித்தூள் 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் ½ தேக்கரண்டி சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கி தொக்கு பதத்திற்கு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறினால் சுவையான தக்காளி தொக்கு தயார்.
இதை இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம் எதனுடன் வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிடலாம் சுவை அல்டிமேட்டாக இருக்கும்.
நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.