
இன்றைக்கு சுவையான கோவா பாயாசம் மற்றும் ரம்பை அல்வா ரெசிபிஸை சுலபமாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
கோவா பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்.
நெய்-1 தேக்கரண்டி.
முந்திரி-10
சேமியா-1 கப்.
பால்-1/2 லிட்டர்.
சர்க்கரை-3 தேக்கரண்டி.
குங்குமப்பூ-1 சிட்டிகை.
கோவா-1 கப்.
ஏலக்காய் தூள்-1 தேக்கரண்டி.
கோவா பாயாசம் செய்முறை விளக்கம்.
முதலில் கடாயில் நெய் 1 தேக்கரண்டி சேர்த்து முந்திரி 10 நன்றாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்போது சேமியா 1 கப்பை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளலாம். இதில் ½ லிட்டர் பால் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். இதில் 3 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும்.
இதனுடனே 1 சிட்டிகை குங்குமப்பூவை சேர்த்து கொதிக்கவிடவும். சேமியா நன்றாக வெந்ததும் அதிலே கோவா ½ கப், ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி, வறுத்து வைத்திருக்கும் முந்திரி 10 சேர்த்து நன்றாக கலந்துவிட்டு இறக்கவும். அவ்வளவு தான் சுவையான கோவா பாயாசம் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
ரம்மை அல்வா செய்ய தேவையான பொருட்கள்.
ரம்பை இலை-10
சோளமாவு-1கப்.
சர்க்கரை-1கப்.
நெய்-தேவையான அளவு.
முந்திரி-10.
ஏலக்காய் தூள்-1 தேக்கரண்டி.
ரம்பை அல்வா செய்முறை விளக்கம்.
முதலில் ரம்பை இலை 10. எடுத்து அதை சின்ன சின்னதாக நறுக்கி மிக்ஸியில் சேர்த்துக் கொள்ளவும். இதில் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்த ஜூஸை வடிகட்டி ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளவும். இதில் 1 கப் சோளமாவை சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக் கொள்ளவும். இப்போது கடாயில் 1 தேக்கரண்டி நெய்விட்டு கரைத்து வைத்திருக்கும் மாவை சேர்த்து கலந்துவிட்டுக் கொண்டேயிருக்கவும்.
இந்த கலவை சற்று கெட்டியானதும் சர்க்கரை 1 கப்பை சேர்த்து கலந்து விடவும். இதில் நெய் சிறிது சேர்த்துக் கொள்ளவும். கடைசியாக ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி, வறுத்த முந்திரி 10 சேர்த்து கலந்து விட்டு இறக்கவும். சுவையான ரம்பை அல்வா தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.