ஸ்வீடனின் பாரம்பரிய முட்டை காபி… நன்மைகள் மற்றும் செய்முறை பார்ப்போமா?

Sweden Egg coffee
Sweden Egg coffee
Published on

ஸ்வீடனின் இந்த முட்டை காபி 19ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இதனை ஸ்காண்டி நேவியா என்ற பழங்குடியினர் கண்டுபிடித்ததாகவும் கூறப்படுகிறது. அந்தவகையில் இதன் நன்மைகள் மற்றும் செய்முறை ஆகியவற்றைப் பார்ப்போம்.

காபியில் முட்டை என்றால் உடனே பலருக்கும் என்னடா இது என்று தோன்றிருக்கும். நம்முடைய உணவு பழக்க வழக்கங்கள் வெளிநாட்டவர்களுக்கு வித்தியாசமாக இருப்பதுபோல், அவர்களின் உணவு பழக்க வழக்கமும் நமக்கு வித்தியாசமாக இருக்கலாம். வாருங்கள் முட்டை காபி குறித்துப் பார்ப்போம்.

காபியில் முட்டை சேர்ப்பதால், காபியில் உள்ள தண்ணீர் பிரிந்துவிடுகிறது. அதேபோல் வெள்ளை கரு முட்டையின் கசப்புத் தன்மையை பிரித்தெடுக்கவும் உதவுகிறது. காபியில் இருக்கும் காபினை மேம்படுத்த உதவுகிறது. இதனால் காபியின் அமிலத்தன்மை மற்றும் கசப்புத்தன்மை ஆகியவை குறைக்கப்படுகிறது.

காபியில் முட்டை சேர்ப்பதால், முட்டையிலிருக்கும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. மேலும் இதனை நாம் காலையிலேயே அருந்துவதால், அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் எளிமையாக நமக்கு கிடைத்துவிடுகிறது. ஆகையால், ஊட்டச்சத்து நிறைந்த பானமாக இது விளங்குகிறது.

இந்த முட்டை காபியை குடித்து வந்தால், உடலின் ஆற்றல் அதிகரிக்கும். அதுவும் உடற்பயிற்சிக்கு முன் அருந்துவதால் அதிக ஆற்றல் கிடைக்கும். மேலும் இதில் அமிலத்தன்மை குறைவதால், வயிறு சார்ந்த பிரச்னைகளை இது தீர்க்கிறது. இது நீரிழிவு, புற்றுநோய் போன்ற நாள்பட்ட வியாதிகள் ஏற்படும் அபாயத்தை குறைப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதற்கு அதிகாரப்பூர்வ சான்றுகள் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  

முட்டை காபி செய்முறை:

தேவையான பொருட்கள்:

1.  முட்டை – 1

2.  காபி பவுடர் – 3 ஸ்பூன்

3.  தேவையான அளவு தண்ணீர்

இதையும் படியுங்கள்:
மஞ்சள் தூளில் அபாயம்: ஈய அளவு அதிகரிப்பு!
Sweden Egg coffee

செய்முறை:

1.  காபியை பில்டர் செய்து எடுத்துக்கொள்ளவும்.

2.  இதில் முட்டையின் வெள்ளைக் கரு மஞ்சள் கரு மற்றும் ஓடு உட்பட அனைத்தையும் சேர்த்துக் கலக்கி வைத்துக்கொள்ளவும். (ஸ்வீடிஷ் முட்டை காபி முறைப்படி)

3.  ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவைக்க வேண்டும்.

4.  நீர் கொதித்தவுடன் அதனுடன் செய்து வைத்த கலவையை சேர்க்கவும். இப்போது அடுப்பை சிம்மில் வைத்துக்கொள்ள வேண்டும்.

5.  4 நிமிடங்கள் இப்படியே கொதிக்க வைக்க வேண்டும்.

6.  பின்னர் வடிகட்டிவிட்டு அருந்தினால், சுவையாக இருக்கும்.

முட்டைப் பிடித்தவர்கள் இதுபோல செய்து குடிக்கலாம். மேலும் முட்டை காபி செய்முறை ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்றார் போல் மாறும் என்பதால், உங்களுக்குப் பிடித்த முறையில் செய்து அருந்திப் பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com