சத்தான 4 வகை ஸ்வீட் கார்ன் ரெசிபிகள்!

4 Nutritious Sweet Corn Recipes!
Sweet corn recipes
Published on

ஸ்வீட் கார்ன் இட்லி

தேவை: 

ஸ்வீட் கார்ன் – 2, 

ரவை, தயிர் – தலா 1 கப், பச்சைப் பட்டாணி – அரை கப்

இஞ்சித் துருவல் – 3 ஸ்பூன் , பச்சை மிளகாய் – 2, 

கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தாளிக்க 

மல்லித்தழை – சிறிது, 

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப. 

செய்முறை: 

ஸ்வீட் கார்னை வேகவைத்து துருவவும். பச்சைப் பட்டாணியுடன் பச்சை மிளகாயைச் சேர்த்து தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும். ரவையுடன் அரைத்த விழுது, தயிர், இஞ்சித் துருவல், உப்பு,  துருவிய கார்ன் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு  தாளித்து ரவைக் கலவையுடன் கலக்கவும். மல்லித்தழை தூவி பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு, மாவைக் கரைத்து, இட்லித்தட்டில் ஊற்றி, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். சுவையான ஸ்வீட் கார்ன் இட்லி ரெடி.

ஸ்வீட் கார்ன் அல்வா 

தேவை:

ஸ்வீட் கார்ன் முத்துக்கள் - 1 கப், 

சர்க்கரை - 2 கப், 

நெய் - 1/2 கப் - 

முந்திரி - 10, 

ரவை - 1 ஸ்பூன், 

துருவிய சீஸ் - 1/2 கப், 

ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை.

செய்முறை :

மிக்சியில் ஸ்வீட் கார்ன் முத்துக்களை போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும். 

வாணலியில் நெய் விட்டு  முந்திரியை பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியே வைக்கவும். பிறகு அதே நெய்யில் ரவையை கொட்டி வறுத்து, அத்துடன் அரைத்த ஸ்வீட் கார்ன் விழுதை சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும். கலவை நன்கு வெந்து சுருண்டு வரும்போது சீஸ், சர்க்கரை சேர்த்து கிளறவும். 

நடுநடுவே நெய் சேர்த்து அல்வா பதத்திற்கு வாணலியில் ஒட்டாமல் வந்ததும் முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி இறக்கவும். 

சுவையான ஸ்வீட் கார்ன் அல்வா தயார்.

இதையும் படியுங்கள்:
அல்டிமேட் சுவையில் மாம்பழ பூரி - தேங்காய் பால் கரி செய்யலாம் வாங்க!
4 Nutritious Sweet Corn Recipes!

ஸ்வீட் கார்ன் சூப்

தேவை :

ஸ்வீட் கார்ன் - அரை கப்,

கோஸ் துருவல் -  அரை கப்,

வெங்காயத்தாள் - 4,

உப்பு - தேவைக்கு,

எண்ணெய் - 3 ஸ்பூன்,

 பச்சைமிளகாய் - 1,

சோள மாவு- 2 ஸ்பூன்.

செய்முறை:

வெங்காயத்தாள், கோஸ், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கோஸ் துருவல் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் ஸ்வீட் கார்னை சேர்த்து நன்கு வதக்கி உப்பு, பச்சைமிளகாய், தேவையான தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.  சிறிது வெந்ததும் சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்து அதில் ஊற்றவும். 2 நிமிடம் கழித்து இறக்கி, பொரித்த பிரெட் துண்டுகள் தூவி அலங்கரித்து பரிமாறவும். சுவையான, சத்தான  ஸ்வீட் கார்ன் சூப் ரெடி.

ஸ்வீட் கார்ன் வடை

தேவை: 

ஸ்வீட் கார்ன் முத்துக்கள் – 1 கப், 

உளுந்தம் பருப்பு– 1 டீஸ்பூன், 

பச்சரிசி – 1 டீஸ்பூன், 

வர மிளகாய் – 6 

சோம்பு – அரை டீஸ்பூன், நறுக்கிய சின்ன வெங்காயம் –  கால் கப், 

புதினா, மல்லித்தழை, கறிவேப்பிலை – அனைத்தும் சேர்ந்து 1 கப் (நறுக்கியது), 

எண்ணெய் – 200 கிராம், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:  

உளுந்தம் பருப்பு, பச்சரிசி ஆகியவற்றை நீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும். இவற்றுடன் ஸ்வீட் கார்ன் முத்துக்கள், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைக்கவும். அரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, சோம்பு சேர்த்துப் பிசைந்து, வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் சிவக்கப் பொரித்தெடுக்கவும். மொறு மொறு ஸ்வீட் கார்ன் வடை தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com