
ஸ்வீட் கார்ன் சாலட் செய்ய தேவையான பொருட்கள்:
வேகவைத்த கார்ன் -ஒரு கப்
வேகவைத்த வெள்ளை சுண்டல்- ஒரு கப்
வட்டமாக நறுக்கிய வெள்ளரிக்காய் -ஒரு கப்
தேங்காய்த் துருவல்- ஒரு டேபிள் ஸ்பூன்
கேரட் துருவல்- ஒரு டேபிள் ஸ்பூன்
நெய்யில் வறுத்து பொடித்த மிளகு, சீரகப்பொடி -அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது- ஒரு டீஸ்பூன்.
மல்லித்தழை பொடியாக நறுக்கியது- கைப்பிடி அளவு
வெங்காயம் சுருள் சுருளாக நறுக்கி வதக்கியது- ஒன்று
லெமன் ஜூஸ் -ஒரு டீஸ்பூன்.
உப்பு- சிறிதளவு
ஸ்வீட் கார்ன் சாலட் செய்முறை:
மேலே கூறிய அனைத்து பொருட்களையும் ஓர் அகலமான பாத்திரத்தில் ஒன்றாக போட்டு உப்புத்தூவி, லெமன் ஜூஸ் கலந்து நன்றாக கலக்கி குலுக்கி விட்டு கப்புகளில் எடுத்து பரிமாற வேண்டியதுதான். மிகவும் சோர்வுற்று இருக்கும் பொழுது இதில் ஒரு கப் சாப்பிட்டு விட்டால் பசியே தெரியாது. நல்ல உற்சாகமாக இருக்கும். இதை சாப்பிட்டவுடன் ஒரு கிளாஸ் லஸ்ஸி குடித்து பாருங்கள். வெயிலுக்கு அப்படி ஒரு குளிர்ச்சி.
சிறுதானிய அடை :
சிறுதானியங்களில் அடிக்கடி அடை, கீர், பாயாசம் அல்லது திடீர் தோசை செய்ய நினைப்பவர்கள் சிறுதானியங்களை நன்றாக கழுவி காய வைத்து வறுத்து மெஷினில் அரைத்து வைத்துக் கொண்டால் சட்டென்று செய்துவிடலாம்.
அடை செய்ய தேவையான பொருட்கள்:
வரகு, சாமை, கம்பு, பணி வரகு திணை தலா- கால் கப்
பச்சரிசி, புழுங்கல் அரிசி தலா-கைப்பிடி அளவு
தட்டைப்பயிறு பாசிப்பயிறு துவரம் பருப்பு மூன்றும் சேர்த்து -முக்கால் கப்
வரமிளகாய்- ஐந்து
சீரகம் -ஒரு டீஸ்பூன்
கேரட் துருவல் -அரை கப்
பொடியாக நறுக்கி வதக்கிய வெங்காயம்- அரை கப்
கருவேப்பிலை, தனியா- கைப்பிடி அளவு
பெருங்காயம் -சிறிதளவு
இஞ்சி துருவல்- ஒரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
சிறுதானிய அடை செய்முறை:
சிறுதானியம் மற்றும் அரிசி, பருப்பு வகைகளை தனித்தனியாக ஊறவைத்து வர மிளகாய், சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதனுடன் கேரட், வெங்காயம், இஞ்சித் துருவல், பெருங்காயம், உப்பு, கருவேப்பிலை, தனியா போன்றவற்றை சேர்த்து நன்றாக கலந்து அடை மாவு பதத்திற்கு வைத்துக் கொண்டு தோசை தவாவில் ஊற்றி நன்றாக எண்ணெய் விட்டு இருபுறமும் திருப்பிப் போட்டு நன்றாக வெந்தவுடன் கார சட்னி அல்லது இஞ்சி சட்னி உடன் பரிமாறவும். அவியல் இருந்தால் சூப்பரோ சூப்பர்.
வித்தியாசமான ருசியுடன் சிறுதானியங்களை இப்படி பயன்படுத்தி செய்தால் குழந்தைகள் விரும்பி உண்பர். சிறுதானியத்தை ஒதுக்காமல் சாப்பிடுவதற்கு, அவர்களையும் சாப்பிட வைப்பதற்கு ஒரு சிறந்த வழி இது போன்றது தான்.