
கல்லீரலில் கொழுப்புகள் தங்குவதே Fatty Liver என்று கூறப்படுகிறது. இதில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று Alchoholic fatty liver. மற்றொன்று Non alcoholic fatty liver என்பதாகும்.
கல்லீரல் கொழுப்பு என்பது பெரும்பாலும் பருமனாக இருப்பவர்களுக்கு ஏற்படும். மருத்துவ ஆராய்ச்சியில் இரண்டரை லட்சம் மக்களை ஆராய்ந்ததில் 65 சதவீதம் கல்லீரல் கொழுப்பு உடையவர்களாகவும், 85சதவீதம் Non alcoholic liver உடையவர்களாகவும் இருப்பதாக அறியப்பட்டிருக்கிறது.
கல்லீரல் கொழுப்பு உள்ளதை கைகள் மூலம் அறிய முடியும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?!
சிவந்த உள்ளங்கைகள்:
உங்கள் உள்ளங்கை சிவந்து இருந்தால் அது Erythema என்று கூறுவார்கள். இந்த நிலைமையில் உள்ளங்கை சிவந்திருக்கும். குறிப்பாக கட்டைவிரல் மற்றும் சுண்டு விரலின் கீழ் மிகவும் சிவந்திருக்கும். இது ஹார்மோன் சமச்சீர் இன்மையால் ஏற்படுகிறது. அது கல்லீரல் சரியாக செயல்படாததையே குறிக்கிறது.
சரும அரிப்பு:
கல்லீரல் கொழுப்பினால் சருமம் மற்றும் கைகளிலும் அரிப்பு ஏற்படும். இது பைல் உப்புகள் (Bile salts) கல்லீரலில் சரியாக சுத்திகரிக்கப்படாததால் ஏற்படுகிறது. இதனால் உடலில் அரிப்பு தொடர்ந்து இருக்கும்.
கல்லீரல் கொழுப்பால் ஊட்டச்சத்து குறைவு ஏற்பட்டு விரல்கள் மிகவும் மெலிந்து காணப்படும். இதனால் சருமம் வறண்டு காயங்கள் மற்றும் கிழிதல் ஏற்படும். கொலாஜன் உற்பத்தி தடைபடுவதால் இது ஏற்படுகிறது.
Spider Angiomos:
சிலந்தி கூடுகள் போன்று இரத்த நாளங்கள் கை, முகம் போன்ற இடங்களில் காணப்படும். கல்லீரல் ஈஸ்ட்ரோஜனை மெடபாலிசம் செய்ய முடியாததால் இதுபோன்ற தோற்றங்கள் ஏற்படும். இது நிலைமை முற்றிய கல்லீரல் கொழுப்பை குறிக்கிறது.
Clubbing of fingers:
மிகவும் முற்றிய கல்லீரல் கொழுப்பில், விரல் நுனியில் உருண்டையாக ஆகும். இது உடலில் பிராணவாயு குறைவதை உணர்த்துகிறது. இது கல்லீரலில் Cirrhosis மற்றும் Liver fibrosis நிலைமையை குறிக்கிறது.