Sweet Corn Soup full of flavor and health!
Healthy soup recipes

சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த ஸ்வீட் கார்ன் சூப் - "பஹாடி சாய்" செய்யலாமா?

Published on

குளிருக்கு இதமாக சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த  ஸ்வீட் கார்ன் சூப் மற்றும் "பஹாடி சாய்" செய்யலாமா? புது வருடத்தை ஸ்வீட் கார்ன் சூப் மற்றும் "பஹாடி சாய்" செய்து சுறு சுறுப்பாய் ஆரம்பிக்கலாம் வாங்க!

ஸ்வீட் கார்ன் சூப்

தேவையான பொருள்கள்:

மக்காச் சோளக் கதிர்  2

பட்டர்  2 டேபிள் ஸ்பூன் 

வெங்காயம்  1

பூண்டு  12 பற்கள் 

காய்கறிகள் வேக வைத்த தண்ணீர் 2 கப் 

கெட்டி க்ரீம் ½ கப்.

உப்பு & மிளகுத் தூள் தேவையான அளவு 

ஃபிரஷ் கொத்தமல்லி இலைகள் ஒரு கைப்பிடி 

நெய்யில் வறுத்த ரஸ்க் துண்டுகள் ஒரு கைப்பிடி

செய்முறை: 

மக்காச்சோள முத்துக்களை சோளக்கதிரிலிருந்து பிரித்தெடுத்து கொதிநீரில் போட்டு ஐந்து நிமிடம் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு வாயகன்ற கடாயை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் பட்டர் சேர்க்கவும்.

அதில் வெங்காயம் பூண்டை நறுக்கி சேர்க்கவும். அவை சிறிது சிவந்ததும் ஒரு மிக்ஸியில் போடவும். அதனுடன் முக்கால் பங்கு  சோள மணிகளை சேர்த்து அரைக்கவும்.

நன்கு மசிந்தவுடன் அதனுடன் க்ரீம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கலவையை சேர்த்து அதனுடன் காய்கறி ப்ரோத் (broth) ஊற்றி அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும். அதனுடன் மீதமுள்ள சோள முத்துக்களை சேர்க்கவும். பின் உப்பு மிளகுத்தூள் தேவையான அளவு சேர்க்கவும். அதில் 1 டேபிள் ஸ்பூன் பட்டரை சேர்த்து இறக்கிவிடவும். கொத்த மல்லி இலைகளைச் சேர்த்து அலங்கரிக்கவும். நெய்யில் வறுத்த ரஸ்க் துண்டுகளைச் சேர்த்து சூடாகப் பரிமாறி சுவைத்து மகிழவும்.

"பஹாடி சாய்" 

மலைப் பிரதேசங்களில் வாழும் "பஹாய்" இன மக்கள் அங்கு கிடைக்கும் பொருள்களைக் கொண்டு நாவில் நீர் ஊறச் செய்யும் பலவகை உணவுகளை தயாரித்து உட்கொண்டு வருகின்றனர். அதில் ஒன்று இந்த "பஹாடி சாய்". அதன் செய்முறை எவ்வாறு என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகள் விரும்பும் ஆந்திரா ஸ்பெஷல் பூர்ணம் பூரேலு!
Sweet Corn Soup full of flavor and health!

தேவையான பொருள்கள்:

ஏலக்காய் 2

பால் 1 கப்

தண்ணீர் 2 கப் 

பட்டை 1 இன்ச் அளவு

சர்க்கரை 3 டீஸ்பூன் 

டீ இலை 2 டீஸ்பூன் 

லவங்கம் 2

துருவிய இஞ்சி 1 டீஸ்பூன் 

செய்முறை:

லவங்கம், ஏலக்காய், இஞ்சி ஆகியவற்றை நன்கு நசுக்கிக் கொள்ளவும். ஒரு பேனில் (Pan) தண்ணீர் ஊற்றி சூடானதும் அதில் நசுக்கிய ஸ்பைஸஸ் மற்றும் பட்டை சேர்க்கவும். தண்ணீர் கொதி நிலைக்கு வந்ததும் டீ இலைகளையும் சர்க்கரையும் சேர்க்கவும்.

அதன் பிறகு அதனுடன் பால் சேர்க்கவும். மிதமான தீயில் வைத்து மூன்று நான்கு நிமிடங்கள் கொதிக்க விடவும். பின் வடிகட்டி கப்பில் ஊற்றி சுடச்சுட அருந்தவும்.

logo
Kalki Online
kalkionline.com