டேஸ்ட்டி சேமியா டெஸர்ட்!

healthy samayal recipes
Semiya Dessert recipe
மும்பை மீனலதா

வணக்கம். ஆர். மீனலதாவாகிய அடியேன், என்னைப் பற்றிய சில வரிகளைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். **சிறு வயது முதலேயே, என்னுடன் ஐக்கியமான எழுத்து, நடிப்பு, பேச்சு, பாட்டு, விளையாட்டு, பிறர்க்கு உதவுவது, புது மாதிரியாக யோசித்து ஆர்வத்துடன் செயல்படுவது போன்ற பல செயல்கள், சீனியர் சிட்டிசன் ஆன பிறகும் தொடர்கிறது. (சகலகலாவல்லி என்று அநேகர் என்னைக் குறித்து கூறுவதுண்டு😊) **கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறேன். **தமிழார்வம் கொண்டவள். **அனைத்தும் டிஜிட்டல் மயமாக ஆனபோதிலும், எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, எழுதுவதை அதிகம் விரும்புபவள். **கட்டுரை, நேர்காணல், சிறுகதை, சமையல், மோட்டிவேஷன், நகைச்சுவைக்கதை போன்ற பல்வேறு விஷயங்களைக் குறித்து எழுதி வருகிறேன். **பத்திரிகைகள் அளிக்கும் ஆதரவு, புது விஷயம் எழுத அளிக்கும் தூண்டுதல், அவ்வப்போது அவர்கள் கொடுக்கும் அருமையான டிப்ஸ் ஆகியவைகள் எனது எழுத்தினை மேன்மேலும் மெருகூட்ட மிகவும் உதவியாக உள்ளன.

Updated on: 

மெல்லிய நைலான் சேமியாவை உபயோகித்து எனது குஜராத்தி சிநேகிதி செய்திருந்த டெஸர்ட் செம டேஸ்ட்டியாக இருக்கவும், அதன் ரெசிபியைக் கேட்டேன். இதற்கு மில்க் பவுடர் மற்றும் கன்டென்ஸ்டு மில்க் தேவையில்லை என்றவள்,  ரெசிபியை கூறினாள்.

தேவை:

* மெல்லிய நைலான் சேமியா 200 கிராம்

* நல்ல நெய்     1/4. கப்

* ஜீனி                  1 கப்

* நல்ல ஃபுல் க்ரீம் மில்க்  1/2 லிட்டர்

* நல்ல பால்   1/4 கப்

* கஸ்டர்ட் பவுடர்  2 டேபிள்ஸ்பூன்

* மிக்ஸ்ட்  ட்ரை ஃப்ரூட்ஸ் 1/4 கப்

செய்முறை:

முதலில், சேமியாவை ஒடித்து வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் நெய் விட்டு அடுப்பின் மீது வைத்து காய்ந்ததும், ஒடித்து வைத்திருக்கும் சேமியாவைப் போட்டு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். அடுப்பை அணைத்து, கீழே இறக்கி வைக்கவும். 

நல்ல பாலில், கஸ்டர்ட் பவுடரைப் போட்டு மிக்ஸ் செய்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
மாஸான சுவையில் பொடிமாஸ் வகைகள் நான்கு!
healthy samayal recipes

மற்றொரு அடிக்கனமான வாணலியை அடுப்பின் மீது வைத்து அதில்,  ஃபுல் க்ரீம் மில்க்கை விட்டு காய்ச்சவும். நன்றாக கொதிக்கையில், ஜீனியைப் போட்டு கலக்கவும். அடுப்பை சிம்மில் வைக்கவும். இப்போது, கஸ்டர்ட் பவுடர் மிக்ஸ்ட் மில்க்கை இதில் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கிண்டவும்.  கெட்டியான பின் அடுப்பிலிருந்து கீழே இறக்கிவிடவும். 

அரை இன்ஞ் உயரமுடைய செவ்வக வடிவ ட்ரேயில், மூன்று பக்கங்களிலும் நெய் தடவி பொன்னிறமாக  வறுத்த நைலான் சேமியாவில் பாதியை சமமாக பரப்பவும். இதன் மீது மிதமான சூட்டிலிருக்கும் கெட்டியான பாலை பரவலாக, திக்காக விடவும். பின்னர், மீதி சேமியாவை பாலின் மேல் சமமாக தூவி, ட்ரை ஃப்ரூட்ஸ்களைப் போட்டு, நன்கு அழுத்திவிடவும்.

சுமார் பத்து நிமிடங்கள் சென்ற பின், ட்ரேயை  ஃப்ரிட்ஜிற்குள் ஒரு மணி நேரம் வைத்து வெளியே எடுத்து, மெதுவாக சதுர வடிவில் கட் செய்து வாயகன்ற ஃபௌலில் போட்டு, ஸ்பூனால் எடுத்து  சாப்பிடுகையில், செம டேஸ்ட்டாக இருக்கும் இந்த புது மாதிரியான சேமியா டெஸர்ட்.

logo
Kalki Online
kalkionline.com