சர்க்கரைவள்ளிக் கிழங்கு பயன்படுத்தி அல்வா செய்யலாம் வாங்க!

Sweet Potato Halwa.
Sweet Potato Halwa.
Published on

இதுவரை நீங்கள் எத்தனையோ விதமாக அல்வா செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் சர்க்கரைவள்ளிக் கிழங்கு பயன்படுத்தி அல்வா செய்ததுண்டா?. சர்க்கரைவள்ளிக் கிழங்கின் இயற்கையான இனிப்பு மற்றும் ஆரோக்கிய கலவையுடன் செய்யப்படும் இந்த அல்வா, உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. இந்த பதிவில் நான் சொல்லப்போகும் குறிப்புகளைப் பின்பற்றி சூப்பரான சுவையில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு அல்வை நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். இந்த அல்வா செய்வது மிகவும் எளிது. அதுவும் குழந்தைகளுக்குக் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். வித்தியாசமாக ஏதேனும் செய்ய நினைத்தால், இந்த அல்வாவை ஒரு முறை முயற்சி செய்யுங்கள். 

தேவையான பொருட்கள்: 

  • 2 சர்க்கரைவள்ளிக்கிழங்கு

  • 1 கப் பால்

  • ½ கப் சர்க்கரை 

  • ¼ கப் நெய் 

  • ¼ கப் நட்ஸ் 

  • ½ ஸ்பூன் ஏலக்காய் தூள்

செய்முறை: 

முதலில் சக்கரைவள்ளிக் கிழங்கை குக்கரில் மூன்று முதல் நான்கு விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள். வேக வைத்த சக்கரைவள்ளிக் கிழங்கின் மேலே உள்ள தோலை நீக்கி மசித்துக் கொள்ளவும்.  

இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நெய் சேர்த்து சூடானதும், மசித்து வைத்துள்ள சர்க்கரைவள்ளிக் கிழங்கை சேர்க்கவும். அடுத்ததாக அதில் பாலை ஊற்றி சுமார் பத்து நிமிடங்களுக்கு குறைந்த வெப்பத்தில், கொதிக்க விடுங்கள். 

சர்க்கரைவள்ளிக் கிழங்கு பாலை நன்றாக உறிஞ்சி மென்மையாக மாறிய பின்னர், சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறுங்கள். இந்த கலவை கடாயில் ஒட்டாத பதத்திற்கு வரும் வரை கிளறிக் கொண்டே இருங்கள். 

இதையும் படியுங்கள்:
உடல் எடையை அதிகரிக்க உதவும் Soya Chunks… எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா? 
Sweet Potato Halwa.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு கலவை அல்வா பதத்திற்கு வந்ததும், நெயில் வறுத்தெடுத்த நட்ஸ் சேர்த்து, இரண்டு மூன்று நிமிடங்கள் நன்றாகக் கிளறிக்கொண்டே இருந்தால் சுவையான சர்க்கரைவள்ளிக் கிழங்கு அல்வா தயார். 

இந்த அல்வா மிதமான சூட்டில் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். இன்றைய முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com