மீல் மேக்கர், சோயா இறைச்சி என அழைக்கப்படும் Soya Chunks தாவர அடிப்படையிலான புரதத்திற்கு மிகவும் பிரபலமானது. சோயா பீன்களில் இருந்து பெறப்படும் சோயா சங்ஸ் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. இது பல்வேறு விதமான சைவ உணவுகளில் இறைச்சிக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பதிவில் சோயா சங்க்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
சோயா ரொட்டிகள் அதன் புரத உள்ளடக்கத்திற்காக பெரும்பாலான நபர்களால் விரும்பி உண்ணப்படுகிறது. அவை கணிசமான அளவில் அதிக புரதத்தை தருவதால், உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வாக உள்ளது. அதாவது 100 கிராம் மீல் மேக்கரில் சராசரியாக 50 கிராம் அளவுக்கு புரதம் நிறைந்து காணப்படுகிறது. தசை வளர்ச்சியைத் தூண்டி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சோயா ரொட்டிகள் அதிகம் பங்காற்றுகின்றன.
சோயா சங்ஸில் நிறைவுற்ற கொழுப்பு குறைவாகவே உள்ளதால் இது ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும் இதில் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பான ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதால், கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து இதய நோய் ஆபத்தைக் குறைக்கிறது.
ஆரோக்கியமான செரிமான அமைப்பை பராமரிப்பதில் நார்ச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. சோயா ரொட்டிகளில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவி, மலச்சிக்கலைத் தடுத்து, குடல் இயக்கங்களை ஆதரிக்கிறது. இதன் மூலமாக உடல் எடை மேலாண்மைக்கு சோயா ரொட்டிகள் பெரிதும் உதவுகின்றன.
அத்தியாவசிய விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சோயா சங்சில் நிரம்பியுள்ளன. குறிப்பாக இரும்பு, கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் இவற்றில் இருப்பதால் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி, எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றன. அசைவம் சாப்பிடாதவர்களின் ஊட்டச்சத்து தேவையை சோயா சங்க்ஸ் பெரிதளவில் பூர்த்தி செய்கிறது.
இவற்றில் அதிகப்படியான புரதம் மற்றும் நார்ச்சத்து இருப்பதால், உடல் எடை மேலாண்மை அல்லது நீரிழிவு மேலாண்மை போன்றவற்றிற்கு பெரிதளவில் உதவுகின்றன. இதை சாப்பிடுவதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். மேலும் சோயா ரொட்டிகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு கொண்டவை என்பதால், ரத்த குளுக்கோஸ் அளவுகளில் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்துகின்றன. எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக சோயா சங்க்ஸ் இருக்கும்.
Soya Chunks சாப்பிடலாமா?
இப்படி பல்வேறு நன்மைகளை Soya Chunks வழங்கினாலும், இவற்றை சாப்பிடக்கூடாது என்ற கருத்து பெரும்பாலான நபர்களிடம் பரவி வருகிறது. இதை சாப்பிடுவதால் எந்த ஒரு கெடுதலும் இல்லை என்றாலும், அதிகமாக எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக நீங்கள் சோயா சங்க்ஸ் உணவில் சேர்க்க விரும்புகிறீர்கள் என்றால், ஒரு சுகாதார நிபுணரிடம் கலந்தாலோசித்து ஒரு நாளைக்கு எவ்வளவு எடுத்துக் கொள்ளலாம் என்பதைத் தெரிந்து கொண்டு சாப்பிடவும். சராசரியாக ஒரு நாளைக்கு 50 கிராம் வரை சாப்பிடுவது ஆரோக்கியமானதாகும். இது ஒன்றும் நீங்கள் நினைப்பது போல வெறுத்து ஒதுக்கக்கூடிய உணவல்ல. குறைந்த செலவில் அதிக ஊட்டச்சத்தை வழங்கக்கூடிய உணவுகளில் இதுவும் ஒன்றாகும். எனவே மிதமான அளவில் சாப்பிடுவது எந்த ஒரு கெடுதலையும் கொடுத்துவிடாது.