வித்தியாசமான சுவைகொண்ட நான்கு வகை போளிகள்..!

Boli recipes
Boli recipesImage credit - yummytummyaarthi.com
Published on

சர்க்கரை போளி

தேவை:

கோதுமை மாவு - 1 கப்,

அரிசி மாவு-  1/2 கப்,

சர்க்கரை -1 கப்

நெய் - 3 ஸ்பூன்,

ஏலக்காய் தூள் - சிறிது,

கசகசா - 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

கோதுமை மாவு, அரிசி மாவு இரண்டையும் கலக்கவும். சர்க்கரையை பொடித்து, வெந்நீரில் கரைத்து, ஏலக்காய் தூள், நெய்யில் வறுத்த கசகசா ஆகியவற்றை சேர்க்கவும். இந்த நீரை மாவில் தெளித்து, தெளித்து பின்னர் அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு மாவை உருண்டைகளாக உருட்டி போளிகளாக வாழை இலையில் தட்டவும். தவாவை காயவைத்து, ஒவ்வொரு போளியாக போட்டு, சிறிது நெய் விட்டு, இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

பருப்பு  கார போளி

தேவை:

கோதுமை மாவு - 2 கப்,

கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு - தலா 1 கப் 

பச்சை மிளகாய் - 3

மல்லித்தழை - சிறிது,

பெருங்காயத்தூள்   - சிறிது,

எலுமிச்சை சாறு - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப 

செய்முறை: 

கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு இரண்டையும் நீரில் ஊறவைத்து, சிறிது நேரம் கழித்து, நீரை வடித்துவிட்டு, உப்பு, பச்சை மிளகாய், மல்லித்தழை சேர்த்து, கெட்டியாக அரைக்கவும். இதில் பெருங்காயத்தூள், எலுமிச்சை சாறு சேர்த்து வைக்கவும். மைதா மாவை சிறிது நீர் விட்டு பிசைந்து, அரை மணி நேரம் கழித்து மாவை உருண்டைகளாக உருட்டவும். அதில் குழி செய்து, பருப்பு பூரணத்தை வைத்து மூடி போளிகளாகத் தட்டவும். தோசைக் கல்லில் ஒவ்வொரு போளியாக போட்டு, எண்ணெய் விட்டு, இருபுறமும் வெந்ததும் எடுத்து வைக்கவும். சுவையான பருப்பு கார போளி தயார்.

இதையும் படியுங்கள்:
பேச்சிலர்ஸ் குக்கிங் – இன்றைய ஸ்பெஷல் – திடீர் வடகறி!
Boli recipes

காய்கறி போளி 

தேவை:

மைதா மாவு - 2 கப்

உருளைக்கிழங்கு - 1

கேரட் - 2

பீன்ஸ் - 20

மல்லித்தழை - சிறிது 

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

அனைத்து காய்கறிகளையும் நறுக்கி, வேகவைக்கவும். மல்லித்தழை, சிறிது உப்பு சேர்க்கவும். மாவை நீர் விட்டு பிசைந்து, அரைமணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் அவற்றை உருண்டைகளாக உருட்டி, அவற்றில் குழி செய்து, இந்த காய்கறிக் கலவையை குழிக்குள் நிரப்பி மூடி, போலிகளாக தட்டி வைக்கவும். தவாவை காயவைத்து, சிறிது எண்ணெய் விட்டு, போளிகளை அதில் போட்டு, இரு புறமும்  வெந்ததும், எடுத்து வைக்கவும்.‌சத்தான காய்கறி போளி தயார்.

நட்ஸ் போளி

தேவை:

மைதா மாவு - 2 கப்,

சர்க்கரை - அரை கப் 

மில்க் மெய்ட் - 2 ஸ்பூன் ,

நெய் - தேவைக்கேற்ப 

முந்திரி, பாதாம், பிஸ்தா - தலா 8

செய்முறை:

சர்க்கரை,  முந்திரிப் பருப்பு, பாதாம், பிஸ்தாவை கரகரப்பாக பொடிக்கவும். அதனுடன் மில்க்மெய்டு சேர்த்துக் குழைக்கவும். மைதா மாவை நீர் விட்டு பிசைந்து அரைமணி நேரம் கழித்து இந்த மாவை உருண்டைகளாக உருட்டவும். அவற்றில் குழி செய்து, நட்ஸ் கலவையை வைத்து மூடி, போளிகளாகத் தட்டவும். தவாவில் சிறிது நெய் விட்டு, இந்த நட்ஸ் போளிகளை இரு புறமும் வேகவைத்து எடுத்தால், சத்தான நட்ஸ் போளி தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com