ஜம்மென்று நாலு வகை ஜாங்கிரிகள்!

Sweet recipe tips!
four types of jangry!
Published on

கோதுமை ரவை ஜாங்கிரி

தேவை:

கோதுமை ரவை - 2 கப்

அரிசி மாவு, கடலை மாவு - தலா 3 டீஸ்பூன்

நெய் - அரை கப்

எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்

பால் - அரை கப்

சர்க்கரை - ஒன்றரை கப்

குங்குமப்பூ - சிறிது

செய்முறை:

கோதுமை ரவை, அரிசிமாவு, கடலை மாவு, சிறிது நெய் ஆகியவற்றை சிறிது பால் விட்டு, இட்லி மாவு பதத்தில் கரைக்கவும். அதில் எலுமிச்சை சாறு கலந்து, 12 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தாம்பாளத்தில் அதைக் கொட்டி, சிறிது பால் தெளித்து, கையால் சுழற்றி சுழற்றி தேய்த்து கம்பி பதத்திற்கு கொண்டு வரவும். சர்க்கரையை இளம் பாக்கு காய்ச்சி, குங்குமப்பூ சேர்க்கவும். தட்டையாக உள்ள வாணலியில் நெய் விட்டு, ஜாங்கிரி துணியில் மாவை வைத்து பிழிந்து சிவந்ததும் எடுத்து சர்க்கரை பாகில் தோய்த்து எடுத்து வைக்கவும். சுவையான கோதுமை ரவை ஜாங்கிரி தயார்.

கார ஜாங்கிரி

தேவை.

பச்சரிசி மாவு - 2 கப்

மைதா மாவு - அரை கப்

வற மிளகாய் - மூன்று

பெருங்காயம் - சிறிது

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

வற மிளகாய், பெருங்காயம், உப்பு மூன்றையும் நைசாக அரைக்கவும். அரிசி மாவு, மைதா மாவு இவற்றுடன் அரைத்த விழுது சேர்த்து, நீர் விட்டு, கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் மாவை ஜாங்கிரிகளாக பிழியவும். சுவையான கார ஜாங்கிரி தயார்.

இதையும் படியுங்கள்:
உறவும், உப்பும் ஒண்ணுதான். அளவாக இருந்தா நல்லது... அதிகமா, குறைவா இருந்தால்?
Sweet recipe tips!

தயிர் ஜாங்கிரி

தேவை:

பச்சரிசி மாவு - 2 கப்

உளுந்து மாவு - 1 கப்

கெட்டி தயிர் - 3 கப்

சர்க்கரை - 200 கிராம்

ஏலக்காய் பொடி- ஒரு ஸ்பூன்

குங்குமப்பூ - சிறிது

சோள மாவு - 1ஸ்பூன்

எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

பச்சரிசி மாவு, உளுந்து மாவு, சோள மாவு, தயிர் ஆகியவற்றைக் கலந்து, ஒரு நாள் முழுவதும் ஊற விடவும். பிறகு சர்க்கரையை இளம் பாகாக காய்ச்சி, குங்குமப்பூ, ஏலக்காய் பொடி சேர்க்கவும். ‌ ‌ தட்டையான வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், தீயை சிம்மில் வைத்து, கரைத்த மாவை ஜாங்கிரிகளாக பிழிந்து, வெந்ததும் எடுத்து பாகில் தோய்த்து எடுத்து வேறு பாத்திரத்தில் வைக்கவும். இது வித்தியாசமான சுவையுடைய ஜாங்கிரி ஆகும்.

பன்னீர் ஜாங்கிரி

தேவை.

பச்சரிசி மாவு - 2 கப்

ஏலக்காய் தூள்- 1 டீஸ்பூன்

பன்னீர் - அரை கப்

ஜிலேபி பவுடர் - 1 ஸ்பூன்

சர்க்கரை - 1 கப்

குங்குமப்பூ - சிறிது

செய்முறை:

பச்சரிசி மாவை பன்னீருடன் சிறிது நீர் கலந்து, கூழ்போல் கெட்டியாக கரைத்து, 8 மணி நேரம் ஊறவைக்கவும். சர்க்கரையை தேன் பதத்திற்கு பாகு காய்ச்சி, குங்குமப்பூ, ஏலக்காய் தூள், ஜிலேபி பவுடர் சேர்க்கவும். தட்டையான வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மாவை ஜாங்கிரி துணியில் நிரப்பி பிழிந்து பொரித்து எடுத்து சர்க்கரைப்பாகில் தோய்த்து எடுத்துவைக்கவும். சுவையான பன்னீர் ஜாங்கிரி தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com