அசத்தும் சுவையில் செட்டிநாடு ஸ்டைல் அரிசி உப்புமா!

அரிசி உப்புமா
அரிசி உப்புமாwww.youtube.com

த்தனை உணவு வகைகள் வந்தாலும் நமக்கு அவசரத்தில் கை கொடுப்பது உப்புமா வகைகள்தான். ரவா உப்புமாவில் துவங்கி, அரிசி உப்புமா வரை வகை வகையான உப்புமாக்கள் ஐந்தே நிமிடத்தில் ரெடி என்று நமது தட்டுகளில் விழும்.

ஆனாலும் உப்புமா என்றாலே முகம் சுளித்து வேண்டாம் என்று அலறுபவர்களும் உண்டு. ஆனால் இந்த உப்புமாவிலும் சேர்க்க வேண்டியதை சேர்த்து ருசியாக தந்தால் நிச்சயம் ரசித்து உண்பார்கள். அரிசி உப்புமாவை பற்றி அனைவரும் கேள்விப்பட்டு இருப்போம். அரிசி உப்புமா என்பது ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு செய்முறையில் மாறுபட்டே இருக்கிறது. ஒரு சிலர் பச்சரிசி ஒரு சிலர் புழுங்கலரிசி இப்படி பல மாறுதல்கள் இருந்தாலும் அடிப்படையாக அரிசி உடைத்து செய்வதுதான் அரிசி உப்புமா. வாருங்கள் நாம் செட்டிநாடு ஸ்டைலில் அரிசி உப்புமா எப்படி செய்வது என்று பார்ப்போம்.


தேவையான பொருட்கள்:

புழுங்கல் பொன்னி அரிசி  - ஒரு கப்
துவரம் பருப்பு -ரெண்டு டேபிள் ஸ்பூன் மிளகு -  ஒன்றரை டீஸ்பூன் சீரகம் - ஒரு டீஸ்பூன்.

அரிசியையும், துவரம் பருப்பையும் நன்கு கழுவி அதிலுள்ள நீரை வடிகட்டி சுத்தமான காட்டன் துணியில் இட்டு காற்றோட்டமான இடத்தில் ஆறவிடவும். உலர்ந்த அரிசியுடன் மிளகு சீரகம் கலந்து மிக்ஸியில் இட்டு ஒன்று இரண்டாக பொடிக்கவும். நைசாக இருக்கக் கூடாது. ஒர் சுற்று கொடுத்தால் போதும். இதை  ஒரு டைட்டான கன்டெய்னரில் இட்டு எப்போது நமக்கு தேவையோ அப்போது எடுத்து  உபயோகிக்கலாம்.

இப்போது இவற்றை வைத்து அரிசி உப்புமா செய்யலாம்.


தேவையான பொருட்கள்:
(ஏற்கனவே பொடித்த) அரிசி ரவை - ஒரு கப்
வெங்காயம்-  இரண்டு
தேங்காய் துருவல் - ஒரு  ஸ்பூன்
கடுகு ,உளுந்து ,கடலை பருப்பு - தாளிக்க பச்சை மிளகாய் வர மிளகாய் -தலா இரண்டு
உப்பு -தேவையான அளவு பெருங்காயத்தூள் -சிறிது
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
ந்த அரிசி உப்புமாவை தேங்காய் எண்ணெய்யில் சமைத்தால் உடலுக்கும் நல்லது. ருசியாகவும் இருக்கும். தேங்காய் எண்ணெய் வேண்டாம் என்பவர்கள் தாராளமாக மற்ற எண்ணெயை உபயோகிக்கலாம். (உடன் சிறிது நெய்யும் சேர்க்கலாம்) ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும், கடுகு உளுந்து கடலைப்பருப்பு தாளித்து அதில் பச்சை மிளகாய் வரமிளகாய் போட்டு வதக்கி வெங்காயம் நீள நீளமாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்றாக சிவக்க வதங்கியதும்,  துருவிய தேங்காய் போட்டு வதக்கி  அதில் ஒரு கப் அளவுக்கு தண்ணீர் இரண்டரை டம்ளர் (எந்த கப்பில் எடுத்தோமோ அதே கப்பில்) தண்ணீரை ஊற்றிக் கொதித்ததும் எடுத்து வைத்துள்ள ஒரு கப் பொடித்த ரவையை கை விடாமல் கிளறி அதில் போட்டு நன்கு கலக்கவும்.

இதையும் படியுங்கள்:
நகத்தை அழகாக பராமரிப்பது எப்படி?
அரிசி உப்புமா

சிம்மில் வைத்து இந்த ரவையை போடும்போது நன்கு கிளறி விட்டு போட வேண்டும். அப்போதுதான் நடுவில் கட்டிகள் இல்லாமல் இருக்கும். இப்போது தேவையான உப்பு , பெருங்காயம் சேர்த்து மூடி வைக்கவும். குக்கர் என்றால் ஒரு பத்து நிமிடத்தில் ஆப் செய்து விடலாம். இரண்டு விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் இரண்டு நிமிடம் வைத்து எடுக்கலாம். கிளறிவிட்டு வெளியில் எடுத்ததும் மேலே கொத்தமல்லி தழை தூவி பரிமாறலாம்.

இந்த அரிசி உப்புமாவுக்கு காரசாரமான தக்காளி கொத்து சூப்பர் காம்பினேஷன் ஆக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com