டேஸ்டியான கருப்பு உளுந்து அடை - சோயா பட்டாணி சால்னா ரெசிபிஸ்!

Image credit -  youreverydaycook
Healthy recipes
Published on

ன்றைக்கு சுவையான கருப்பு உளுந்து அடை மற்றும் சோயா பட்டாணி சால்னா ரெசிபியை வீட்டிலேயே சிம்பிளாக எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

கருப்பு உளுந்து அடை செய்ய தேவையான பொருட்கள்.

கருப்பு உளுந்து-1 கப்.

பச்சரிசி-1 கைப்பிடி.

எண்ணெய்-1 குழிக்கரண்டி.

கடுகு-1 தேக்கரண்டி.

உளுந்து-1 தேக்கரண்டி.

கருவேப்பிலை-சிறிதளவு.

பெருங்காயத்தூள்-1 தேக்கரண்டி.

பச்சை மிளகாய்-2

வெங்காயம்-1.

தேங்காய் துருவல்-1 கப்.

உப்பு-தேவையான அளவு.

கருப்பு உளுந்து அடை செய்முறை விளக்கம்.

முதலில் பவுலில் 1 கப் கருப்பு உளுந்துக்கு 1 கைப்பிடி பச்சரிசியை சேர்த்து தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். இப்போது அதை எடுத்து மிக்ஸியில் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

இப்போது கடாயில் எண்ணெய் 1 குழிக்கரண்டி சேர்த்து கடுகு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, நறுக்கிய பச்சை மிளகாய் 2, நறுக்கிய கருவேப்பிலை சிறிதளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி சேர்த்து லேசாக வதக்கவும்.

இத்துடன் துருவிய தேங்காய் 1 கப் சேர்த்து லேசாக வதக்கி இதை அரைத்து வைத்திருக்கும் உளுந்துடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்த பிறகு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் விட்டு மாவை கொஞ்சமாக எடுத்து தட்டி இரண்டு பக்கமும் நன்றாக பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும். அவ்வளவுதான் டேஸ்டியான கருப்பு உளுந்து அடை தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

சோயா பட்டாணி சால்னா செய்ய தேவையான பொருட்கள்.

எண்ணெய்-1 குழிக்கரண்டி.

பட்டை-1

லவங்கம்-1

ஏலக்காய்-2

சோம்பு-1 தேக்கரண்டி.

கருவேப்பிலை-சிறிதளவு.

பச்சை மிளகாய்-2

வெங்காயம்-1

தக்காளி-1

இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.

கொத்தமல்லி-சிறிதளவு.

சோயா-1 கப்.

பட்டாணி-1 கப்.

உப்பு-தேவையான அளவு.

பேஸ்ட் செய்ய,

தேங்காய்-1கப்.

கசகசா-1 தேக்கரண்டி.

மிளகு-1 தேக்கரண்டி.

சோம்பு-1 தேக்கரண்டி.

முந்திரி-10

பொட்டுக்கடலை-1/2 கப்.

இதையும் படியுங்கள்:
உணவில் அஜினோமோட்டோ சேர்ப்பது நல்லதா?
Image credit -  youreverydaycook

சோயா பட்டாணி சால்னா செய்முறை விளக்கம்.

முதலில் கடாயில் 1 குழிக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை 1, லவங்கம் 1, ஏலக்காய் 2, சோம்பு 1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு, நறுக்கிய பச்சை மிளகாய் 2, நறுக்கிய வெங்காயம் 1, இஞ்சிபூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு நறுக்கிய தக்காளி 1, கொத்தமல்லி சிறிதளவு, உப்பு சிறிதளவு சேர்த்து நன்றாக வதக்கவும்.

இப்போது ஊறவைத்த சோயா 1 கப், பட்டாணி 1 கப் சேர்த்து தண்ணீர் விட்டு வேகவிடவும். இப்போது மிக்ஸியில் தேங்காய்1 கப், முந்திரி 10, பொட்டுக்கடலை ½ கப், கசகசா 1 தேக்கரண்டி, மிளகு 1 தேக்கரண்டி, சோம்பு 1 தேக்கரண்டி ஆகியவற்றுடன் தண்ணீர் சிறிது சேர்த்து நன்றாக பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும். இப்போது இதை சோயா பட்டாணியுடன் சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக சுண்டும் அளவிற்கு வேகவைத்து எடுத்தால் சுவையான சோயா பட்டாணி சால்னா தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com