
வாழைப்பூ கட்லெட்
செய்ய தேவையான பொருட்கள்:
பொடியாக நறுக்கிய வாழைப்பூ- ஒரு கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம்-1 கப்
கேரட் துருவல்- கைப்பிடி அளவு
மிளகாய் பொடி- அரை டீஸ்பூன்
பொடியாக நறுக்கி நசுக்கிய இஞ்சி- ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய மல்லித்தழை- கைப்பிடி அளவு
உப்பு, எண்ணெய், ரஸ்க் தூள்- தேவைக்கேற்ப.
செய்முறை:
கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி அதனுடன் இஞ்சி கேரட் துருவல் போன்றவற்றையும் லேசாக வதக்கி விட்டு மல்லித் தழை சேர்த்து நன்றாக புரட்டி பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். பின்னர் நறுக்கிய வாழைப்பூவை போட்டு வதக்கி அதனுடன் சிறிதளவு மிளகாய் பொடி சேர்த்து வதக்கி எடுத்து, இவை எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கலந்து அதனுடன் தேவையான அளவு உப்பு ரஸ்க் தூள் சேர்த்து இந்த கலவையை சிறிய சைஸ் கட்லெட்டுகளாகத் தட்டி தவாவில் காய்ந்த எண்ணெயில் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும். தக்காளி, சில்லி சாஸுடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.
சர்க்கரைவள்ளி கிழங்கு சுழியன்
செய்யத் தேவையான பொருட்கள்:
சர்க்கரைவள்ளி கிழங்கு வேகவைத்து தோல் உரித்து மசித்தது மசித்தது-1கப்
வெல்லத்துருவல்- கால் கப்
சுக்கு, ஏலத்தூள் தலா- ஒரு சிட்டிகை
இட்லி மாவு- ஒரு கப்
மைதா மாவு- ஒரு கைப்பிடி அளவு.
செய்முறை:
புளிக்காத இட்லி மாவுடன் மைதாவை சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும். மேலே கூறிய அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதை கரைத்து வைத்திருக்கும் மாவில் தோய்த்து கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். நல்ல ருசியாக இருக்கும்.