ஜீரா ரைஸ் - ராஜ்மா கிரேவி
ஜீரா ரைஸ் - ராஜ்மா கிரேவிimage credit - youtube.com

டேஸ்டியான ஜீரா ரைஸ் - ராஜ்மா கிரேவியுடன்..!

Published on

ஜீரா ரைஸ் செய்ய தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி- ஒரு கப்

சீரகம்- 2 டீஸ்பூன்

நெய்-மூன்று டேபிள் ஸ்பூன்

உப்பு தேவைக்கு

செய்முறை:

குக்கரில் நெய்விட்டு சூடானதும் சீரகத்தை பொரித்து, கழுவி வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியை லேசாக வறுத்து விட்டு, ஒன்னரை கப் தண்ணீர் விட்டு, தேவையான அளவு உப்பு போட்டு, ஏழு நிமிடம் மூன்று விசில் வரை வைத்து எடுக்கவும். ஜீரா ரைஸ் ரெடி. 

ராஜ்மா கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:

ராஜ்மா- ஒரு கப்

முழு கருப்பு உளுந்து-2 கைப்பிடி

சாம்பார் பொடி -ஒரு டேபிள் ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது- ஒரு டீஸ்பூன்

கசூரி மேத்தி- சிறிதளவு

பிரிஞ்சி இலை- ஒன்று

பெரிய வெங்காயம் -இரண்டு

தக்காளி- இரண்டு

தனியா, கருவேப்பிலை, புதினா தாளிப்பதற்கு மூன்றும் சேர்த்து -ஒரு கைப்பிடி

தனியா விதை- ஒரு டீஸ்பூன்

வெந்தயம் -சிறிதளவு

கரம் மசாலா பொடி- கால் டீஸ்பூன்

ஆம்ச்சூர் பவுடர் -அரை டீஸ்பூன்

எண்ணெய், உப்பு- தேவைக்கேற்ப

செய்முறை:

ராஜ்மா- மற்றும் கருப்பு உளுந்தை நன்றாகக் கழுவி நன்கு உறவைத்து விடவும். வெங்காயம், தக்காளி ,புதினா, கருவேப்பிலை, தனியா அனைத்தையும் பொடியாக அறிந்து வைத்து விடவும். 

இரவில் ஊறவைத்த ராஜ்மா- உளுந்தை குக்கரில் நன்றாக மேல் தோல் உரிந்து வரும் அளவிற்கு வேக வைக்கவும். 

இதையும் படியுங்கள்:
நாம் தவிர்க்க வேண்டிய 7 வகையான மனிதர்கள்!
ஜீரா ரைஸ் - ராஜ்மா கிரேவி

குக்கரை அடுப்பில் வைத்து நன்றாக காய்ந்ததும் தேவையான அளவு எண்ணெய்விட்டு  சூடானதும் பிரிஞ்சி இலை, தனியாவிதை போட்டு தாளிக்கவும். அது நன்றாக சிவந்து வந்ததும் வெந்தயம் போடவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி போன்றவற்றை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் சாம்பார் பொடி, கரம் மசாலா பொடி, ஆம்ச்சூர் பவுடர் போன்றவற்றை சேர்த்து அதனுடன் அரிந்து வைத்திருக்கும் தனியா, புதினா, மல்லித்தழை எல்லாவற்றையும் சேர்த்து ஒரு வதக்கு வதக்கி வேகவைத்திருக்கும் உளுந்துடன் சேர்ந்த ராஜ்மாவை அதில் கொட்டவும்.

பிறகு கசூரி மேத்தியை கசக்கிப் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் விட்டு எடுக்கவும். கருப்பு உளுந்துடன் ராஜ்மா நன்றாக கரைந்து, குறைந்த மசாலாவுடன் ராஜ்மாவின் தனித்தன்மையான ருசி அசத்தலாக இருக்கும். கம கமக்கும் வாசத்துடன் ஜீரா ரைஸ் மற்றும் சப்பாத்தி, ஃபுல்காவுடன் சேர்த்து சாப்பிட ருசி அள்ளும். நீங்களும் ஒருமுறை இதை சமைத்து ருசித்துவிட்டு சொல்லுங்களேன்.

logo
Kalki Online
kalkionline.com