.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
நாம் வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும் என்றால் சிலவற்றை இழந்துதான் ஆகவேண்டும். ஆம். அதில் நமக்கு நன்மை செய்யும் மனிதர்களும் உண்டு. நமக்கு தீமை செய்யும் மனிதர்களும் உண்டு. ஆனால் அவர்கள் செய்யும் விதம்தான் மாறுபடும். அதை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. கீழ்க்கண்ட 7 மனிதர்களிடம் நாம் மிக ஜாக்கிரதையாக இருந்துவிட்டால் போதும். நம்மை அசைக்கவே முடியாது இது நிச்சயம் யார் அந்த ஏழு மனிதர்கள் இதோ இப்பதிவில் படியுங்கள்.
1. உப்பு மூட்டை மனிதர்கள்:
இந்த நபர்கள் உங்கள் ஆற்றலை குறைக்கிறார்கள், அதோடு உங்கள் நேரத்தையும் வீணடிப்பவர்கள். உங்கள் தேவைகளைக் கருத்தில் கொள்ளாமல் அவர்களுக்காக எல்லாவற்றையும் செய்யவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் உங்கள் ஆற்றல், நேரம் மற்றும் வளங்களை சுரண்டுவோர்.
2. கொசு மனிதர்கள்:
இந்த நபர்கள் உங்கள் வாழ்க்கையில் எதிர்மறையை செலுத்தினாலும் உங்களிடமிருந்து நன்மைகளைப் பெற விரும்புகிறார்கள். அவர்கள் வழங்குவதற்கு நல்ல விசயம் எதுவும் அவர்களிடம் இருக்காது. ஆனால் எப்போதும் மற்றவர்களிடமிருந்து என்ன எடுக்க முடியும் என்பதிலேயே முறையாக இருப்பார்கள்.
3. ஆதிக்க மனிதர்கள்:
இந்த நபர்கள் பெருமையை தேடுபவர்கள் மற்றும் பிறரை கட்டுப்படுத்துபவர்கள். அவர்கள் ஒருமுறை உங்களுக்கு உதவினாலும், உங்கள் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த விரும்புபவர்கள். அவர்கள் உங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உங்கள் சுதந்திரத்தை கட்டுப் படுத்தவும் விரும்புபவர்கள்.
4. முதலை மனிதர்கள்:
இவர்கள் உண்மையான நோக்கங்கள் இல்லாத பாசாங்கு மனிதர்கள். அவர்கள் உங்களின் ரகசியங்களை அறிந்து கொள்வதற்காக உங்களுடன் நெருங்கி பழகுவார்கள். மேலும் உங்களுக்குள் பிரச்சனை ஏற்படும்போது அந்த தகவலை உங்களுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய கொடியவர்கள். அவர்கள் பொய்யர்கள், முதுகில் குத்துபவர்கள்.
5. பச்சோந்தி மனிதர்கள்:
இந்த பொறாமை கொண்ட நபர்கள் உங்களுடன் ஆரோக்கியமற்ற போட்டியில் இருப்பவர்கள். அவர்கள் எதிர்மறையான நோக்கங்களுடன் உங்கள் முன்னேற்றத்தை ரகசியமாக கண்காணித்து, உங்கள் வெற்றிகளை ஆதரிக்காமல் அல்லது கொண்டாடாமல் உங்கள் தவறுகளை பெரிதாக்குபவர்கள். கொஞ்சம் அசந்தால் உங்களை குற்ற உணர்வில் தள்ளி விடுவார்கள்.
6. கனவுக் கொலையாளிகள்:
இந்த வகை மனிதர்கள் உங்கள் கனவுகளை பாராட்டவோ அல்லது ஆதரிக்கவோ மாட்டார்கள். அவர்கள் உங்கள் தோல்விகளை விரும்புபவர்கள். அதை மனதார ரசிப்பவர்கள். எப்போதும் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்குபவர்கள். தீர்வுகளுக்குப் பதிலாக அதிக சிக்கல்களை உருவாக்குகிறார்கள்.
7. குப்பை மனிதர்கள்:
இந்த நபர்கள் எதிர்மறை மற்றும் கெட்ட செய்திகளைக் கொண்டு வருகிறார்கள். அவர்களின் வாழ்க்கை குப்பைகளால் நிரம்பியுள்ளது, அதோடு அவர்கள் உங்கள் ஊக்கத்தை கெடுத்து, மனச்சோர்வை ஏற்படுத்தும் தகவல்களை பரப்புபவர்கள். துரதிர்ஷ்டவசமாக பிறர் இதயத்தை நொறுக்கி, அதை செய்தியாக்கி, அதில் சந்தோசப்பட்டு வளர்கிறார்கள்.
உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களை மதிப்பீடு செய்து, நீங்கள் நேர்மறையான தாக்கங்களால் சூழப்பட்டிருப்பதை உறுதி செய்வது உங்கள் பொறுப்பு. நீங்கள் நேர்மறையான மனிதர்களுடன் பழகும்போதும், எதிர்மறையானவர்களிடமிருந்து உங்களை துண்டித்துக்கொள்ளும் போதும் உங்கள் வாழ்க்கை வெற்றிக்கான சரியான திசையில் நகரும். உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்கும் அப்புறம் என்ன இதுதானே வாழ்க்கைக்கு மிக முக்கியமானது.