
மாம்பழ பூரி ரெசிபி
தேவையான பொருட்கள்:
1. பழுத்த மாம்பழம் 2
2. மைதா மாவு 1 கப்
3. கோதுமை மாவு ½ கப்
4. ரவை ¼ கப்
5. சர்க்கரை ½ டீஸ்பூன்
6. குங்குமப் பூ 1 டீஸ்பூன்
7. உப்பு தேவையான அளவு
8. சுக்குப் பொடி ¼ டீஸ்பூன்
9. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
10. நெய் 1 டீஸ்பூன்
செய்முறை:
மாம்பழத்தின் சதைப்பகுதியைப் பிரித்தெடுத்து அதனுடன் அரை டீஸ்பூன் குங்குமப் பூ மற்றும் சர்க்கரையை சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மைதா மாவு, கோதுமை மாவு, ரவை, உப்பு, சுக்குப் பொடி, நெய், அரை டீஸ்பூன் குங்குமப் பூ ஆகியவற்றைப் போட்டு நன்கு கைகளால் கலந்து கொள்ளவும். பின் அந்த கலவையில் அரைத்துவைத்த மாம்பழக்கூழை சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ளவும். பின் அதிலிருந்து மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி பூரிக் கட்டையால் பூரிகளைத்திரட்டிக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அடுப்பில் வைத்து சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் திரட்டி வைத்த பூரிகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சுவையான மாம்பழ பூரி தயார்.
இதற்கு தொட்டுக்கொள்ள ஆலூ தம் அல்லது மாம்பழக்கூழையே தொட்டு உண்ணலாம்.
மாங்கா பிரட்டல் ரெசிபி
தேவையான பொருட்கள்:
1. பெரிய சைஸ் மாங்காய் 1
2. ரெட் சில்லி பவுடர் ½ டீஸ்பூன்
3. கடுகு ½ டீஸ்பூன்
4. கறிவேப்பிலை ஒரு இணுக்கு
5. வருத்துப் பொடித்த வெந்தய பவுடர் ½ டீஸ்பூன்
6. பெருங்காயத் தூள் ¼ டீஸ்பூன்
7. உப்பு தேவையான அளவு
8. நல்லெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
9. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
செய்முறை:
மாங்காயை நன்கு கழுவி தோலுடன் பொடிசா நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் சூடானதும் கடுகை சேர்க்கவும். கடுகு வெடித்ததும் கறிவேப்பிலையை போடவும். பிறகு நறுக்கி வைத்துள்ள மாங்காயை போடவும். நன்கு பிரட்டிவிட்டு மீடியமான தீயில் வேக விடவும். முக்கால் பதத்திற்கு வெந்ததும், உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், வெந்தய பவுடர், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிவிடவும். மாங்காய் முழுவதும் வெந்து எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கிவிடவும்.
தயிர் சாதம், சப்பாத்தி போன்றவற்றிற்கு தொட்டுக் கொள்ளலாம். இரண்டு நாட்களுக்குள் உபயோகித்து முடித்துவிட வேண்டும்.