
மாங்காய் மிளகு பர்பி
பாரம்பரிய பர்பியில் மாங்காய் சாறு, மிளகு சேர்த்து ஸ்பைசி ஸ்வீட்.
தேவையான பொருட்கள்:
பால் பவுடர் (Milk Powder) – 1 கப்
கிரீம் (Fresh Cream) – ¼ கப்
சர்க்கரை – ½ கப்
நெய் – 2 மேசைக்கரண்டி
பச்சை மாங்காய் – ½ கப் (துருவியது)
மிளகுப்பொடி – ½ தேக்கரண்டி
ஏலக்காய்ப்பொடி – ¼ தேக்கரண்டி
முந்திரிபருப்பு - 6
ஒரு சிட்டிகை - உப்பு
செய்முறை:
வாணலியில் சிறிது நெய் ஊற்றி, முந்திரியை சிறிது தங்க நிறமாக வறுத்து வைக்கவும். பச்சை மாங்காயை நன்றாக துருவி வைக்கவும். அதில் ஒரு சிட்டிகை உப்பு கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும். ஒரு சுத்தமான பானில் சிறிது நெய் ஊற்றி, துருவிய மாங்காயை 2–3 நிமிடம் லேசாக வதக்கவும். அதில் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து சர்க்கரை கரையும் வரை கிளறவும்.
பிறகு பால் பவுடர் மற்றும் கிரீம் சேர்க்கவும். மிதமான தீயில் கிளறிக்கொண்டே இருங்கள். கலவை கெட்டியாக ஆகும். கலவை சற்று கெட்டியானதும், மிளகு பொடி, ஏலக்காய் பொடி சேர்க்கவும். நன்றாக கலந்து சில நிமிடம் கிளறவும். ஒரு பிளேட்டில் நெய் தடவி கலவையை பரப்பவும். மேல் பகுதியை ஸ்மூத் செய்யவும். பூரணமாக குளிர்ந்ததும், விருப்பமான வடிவங்களில் வெட்டவும்.
மிளகு தகுந்த அளவு மட்டுமே போட்டால் இனிப்போடு மிளகு (mild spice) சுவையும் இருக்கும். இனிமையை சமநிலைப்படுத்த சர்க்கரை அளவை ஓரளவு ஏற்றவோ குறைக்கவோ செய்யலாம். நெய் அதிகம் போட்டால் பர்பி மென்மையாக இருக்கும்.
ரோஸ் ஆப்பிள் ஜிலேபி
தேவையான பொருட்கள்:
மைதா – 1 கப்
கார்ன்ஃப்ளவர் – 2 மேசைக்கரண்டி
தயிர் – ½ கப் (தரமானது)
ஈஸ்ட் – ¼ தேக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
சர்க்கரை – 1 கப்
தண்ணீர் – ½ கப்
ரோஸ் எசென்ஸ் – 2–3 சொட்டு
பச்சை ஏலக்காய்ப்பொடி – ¼ தேக்கரண்டி
லெமன்சாறு – 2 தேக்கரண்டி
ஆப்பிள் – 1 ( தோலுரித்து சிறிய துண்டுகளாக நறுக்கியது)
சர்க்கரை – 2 மேசைக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
மைதா, கார்ன்ஃப்ளவர், தயிர், ஈஸ்ட் மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இடியாப்பம் மாவு போல் ஓரளவு ஓடக்கூடியதாக கலந்து விடவும். மூடி வைத்து 4–6 மணி நேரம் புளிக்க விடவும். சிறிது வெந்நீரில் ஆப்பிள் துண்டுகளை கொதிக்கவிட்டு மென்மையாக ஆக்கவும். அதனுடன் சர்க்கரை ஒரு ஸ்பூன் லெமன் சாறு சேர்த்து வேக வைத்து, பியூரி போல (sauce texture) செய்யவும்.
சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். ஒரு சொட்டு உருட்டும் consistency வந்ததும், ரோஸ் எசென்ஸ், ஏலக்காய் பொடி, ஒரு ஸ்பூன் லெமன் சாறு சேர்த்து இறக்கவும். ஒரு ஜிலேபி பை கொண்டு மாவை நுழைத்து எண்ணெயில் சுற்று சுற்றாக விட்டால் ஜிலேபி வடிவாக வரும். மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரிக்கவும். பொரித்த உடனே சூடான சர்க்கரை பாகில் ஜிலேபியை 1–2 நிமிடம் ஊற விடவும். பிறகு எடுத்துவிட்டு அரை நிமிடம் அப்படியே விடவும். ஜிலேபி மேல் சிறிது ஆப்பிள் சாஸ் தூவி பரிமாறினால், ரோஸ் வாசனையும் ஆப்பிள் இனிப்பும் சேர்ந்து செம சுவை வரும்!
ஜிலேபி மாவு சரியான கன்ஸிஸ்டென்ஸி இருந்தால் தான் நல்ல சுற்று வரும்.