
-அகிலா சிவராமன்
காலை நேரத்தில் கஷ்டமே இல்லாமல் இந்த முங்தால் சீலாவை (பயத்தம் பருப்பு சீலா) செய்திடலாம். உடம்பிற்கும் ஆரோக்கியம். இப்ப எப்படி செய்கிறது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பயத்தம் பருப்பு - 200g (இரண்டு பேருக்கு இது போதுமானது, நீங்கள் வீட்டலிருக்கும் நபர்களுக்கு ஏற்றவாறு அளவை கூட்டிக் கொள்ளவும்.)
பச்சை மிளகாய்- 2
மஞ்சள் தூள் - ¼ spoon
மிளகாய்த் தூள் - ½ spoon
சீரகத் தூள் -1 spoon
கொத்தமல்லி இழை – சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
பயத்தம்பருப்பை ஒரு மணி நேரத்திற்கு ஊறவைத்து அத்துடன் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக நைஸாக அரைத்து கொள்ளவும். தேவையான தண்ணீரை ஊற்றி சீரகத் தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, கொத்தமல்லித் தழைகளை சேர்த்து கலக்கவும். விருப்பமுள்ளவர்கள் சிறிதளவு இஞ்சி பூண்டு விழுதையம் சேர்த்துக் கொள்ளலாம்.
மிகவும் தண்ணியாக கலக்காதீர்கள். தோசைக் கல்லை சூடாக்கி மிதமான தீயில் சுடவும், விருப்பமுள்ளவர்கள் நெய் போட்டும் சுடலாம். இத்துடன் தக்காளி சட்டினி கொத்தமல்லி சட்டினி அல்லது tomato ketchup சேர்த்து சாப்பிடலாம், சுவையாக இருக்கும்.
பார்லி ரொட்டி செய்முறை;
பார்லி மாவு மற்றும் கோதுமை மாவு இரண்டையும் சரி விகிதத்தில் எடுத்து சலித்து கொள்ளவும். உப்பை சேர்த்து மாவை வெத வெதுப்பான சுடு தண்ணீரால் பிசையவும். சப்பாத்திக்கு எப்படி பிசைவோமோ அப்படியே பிசைய வேண்டும். 20 நிமிடங்களுக்கு மாவை ஊறவைக்கவும்.
பிறகு சப்பாத்தியை இட்டு கல்லில் போட்டு இரண்டும் பக்கமும் வெந்த பிறகு எண்ணெய் தடவி எடுக்கலாம் அல்லது வாட்டி சுக்கா ரொட்டியாகவும் சாப்பிடலாம். கர்ப்பிணி பெண்களுக்கு பார்லி மிக அவசியம், நீர் கோர்ப்பதை தவிர்க்கும். யார் வேண்டுமானாலும் இதை உண்ணலாம். எல்லோருக்கும் ஏற்ற சப்பாத்தி. Try பண்ணிவிட்டு எப்படி இருக்கு என்று சொல்லுங்கள்.