
செய்ய தேவையான பொருட்கள்:
சுத்தம் செய்த புளிச்சக்கீரை- ஒரு கப்
தேங்காய் துருவல் -ஒரு கப்
வறுத்து புடைத்த வேர்க்கடலை- அரை கப்
கடலைப்பருப்பு- ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு- ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 10
புளி- ஆரஞ்சு கொட்டை அளவு
பூண்டு- இரண்டு பல்
கடுகு -ஒரு டீஸ்பூன்
சீரகம்- ஒரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு தாளித்து காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், பூண்டு, புளி அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி கடைசியில் கீரையும் சேர்த்து ஒரு புரட்டு புரட்டி நன்றாக ஆறவிட்டு. வேர்க்கடலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுக்கவும். இட்லி தோசையிலிருந்து அனைத்திற்கும் தொட்டுக் கொள்ளலாம். சாதத்தில் நெய் விட்டு இந்த துவையலை சேர்த்து பிசைந்து சாப்பிடலாம். நல்ல ருசியாக இருக்கும்.
பீர்க்கங்காய் துவையல்
செய்ய தேவையான பொருட்கள்:
பீர்க்கங்காய் பொடியாக நறுக்கியது -ஒன்று
காய்ந்த மிளகாய்- 10
உளுத்தம் பருப்பு ,கடலை பருப்பு தலா-ஒரு டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துருவல்- ஒரு டேபிள் ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம்- ஒன்று
புளி- சிறிதளவு
உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப
கடுகு -தாளிக்க
செய்முறை:
வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு தாளித்து, மிளகாய், தேங்காய் துருவல் அனைத்தையும் சேர்த்து வதக்கி எடுத்து விடவும். வாணலியில் மீண்டும் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய பீர்க்கங்காயை வதக்கி ஆறவைத்து மேற்கூறிய அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து உப்பு போட்டு தேவையான அளவு தண்ணீர்விட்டு அரைத்தெடுக்கவும். சாதத்துடன் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும். சிறுதானிய பொங்கல், இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.