
இன்றைக்கு சுவையான ராகி சேமியா புட்டு மற்றும் சுண்டைக்காய் துவையல் ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
ராகி சேமியா புட்டு செய்ய தேவையான பொருட்கள்.
ராகி சேமியா-1 கப்.
வேர்க்கடலை-1கப்.
ஏலக்காய் பொடி-1 தேக்கரண்டி.
துருவிய தேங்காய்-1கப்.
சர்க்கரை-1கப்.
ராகி சேமியா புட்டு செய்முறை விளக்கம்.
முதலில் 1 கப் ராகி சேமியாவை ஒரு பவுலில் எடுத்துக்கொண்டு தண்ணீர் தெளித்து 10 நிமிடத்திற்கு பிறகு பார்த்தால் மிருதுவாக மாறியிருக்கும். இதை இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
நன்றாக வெந்த ராகி சேமியாவைஒரு பவுலில் ஆறவிட்ட பிறகு கொரகொரப்பாக அரைத்த வேர்க்கடலை 1 கப், ஏலக்காய் பொடி 1 தேக்கரண்டி, துருவிய தேங்காய் 1கப், சர்க்கரை 1கப் சேர்த்து நன்றாக கலந்துவிடவும். அவ்வளவு தான் சுவையான ராகி சேமியா புட்டு தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
சுண்டைக்காய் துவையல் செய்ய தேவையான பொருட்கள்.
சுண்டைக்காய்-1 கப்.
எண்ணெய்-2 தேக்கரண்டி.
கடலைப்பருப்பு-2 தேக்கரண்டி.
உளுத்தம் பருப்பு-2 தேக்கரண்டி.
கருவேப்பிலை-சிறிதளவு.
பூண்டு-10
காய்ந்த மிளகாய்-5
கல் உப்பு-தேவையான அளவு.
தேங்காய்-1 கைப்பிடி.
புளி-நெல்லிக்காய் அளவு.
வெல்லம்-சிறிதளவு.
பெருங்காயத்தூள்-1 தேக்கரண்டி.
சுண்டைக்காய் துவையல் செய்முறை விளக்கம்.
முதலில் சுண்டைக்காய் 1 கப்பை நன்றாக இடித்து தண்ணீரில் போட்டு அலசி எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்போது கடாயில்எண்ணெய் 2 தேக்கரண்டி ஊற்றி அதில் கடலைப்பருப்பு 2 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு 2 தேக்கரண்டி போட்டு வறுத்துக்கொள்ளவும். காய்ந்த மிளகாய் 5, கருவேப்பிலை சிறிதளவு, பூண்டு 10 போட்டு நன்றாக வதக்கியதும் அலசி வைத்திருக்கும் சுண்டைக்காய் 1 கப்பை சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதில் தேவையான அளவு கல் உப்பு சேர்த்துவிட்டு சுண்டைக்காய் நன்றாக வதக்கவும். தேங்காய் 1 கைப்பிடி, புளி நெல்லிக்காய் அளவு, பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி, வெல்லம் சிறிதளவு சேர்த்து வதக்கி ஆறிய பிறகு மிக்ஸியில் சிறிது தண்ணீர் வீட்டு துவையல் பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும். அவ்வளவுதான் டேஸ்டியான சுண்டைக்காய் துவையல் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப்பார்த்துட்டு சொல்லுங்க.