
முட்டைகோஸ் பொரியல்
தேவையான பொருட்கள்:
நறுக்கிய முட்டைக்கோஸ் - 2 கப்
எண்ணெய் -ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு - ஒரு ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் -ரெண்டு
கேரட் ,பட்டாணி - கால் கப்
தேங்காய் துருவல் - 1/4 கப்
சாம்பார் வெங்காயம் - ஐந்து
சீரகம் -அரை ஸ்பூன்
வேகவைத்த பாசி பருப்பு - கால் கப்
தேவையான அளவு உப்பு
செய்முறை.
அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கியதும் அதனுடன் நறுக்கிய கோஸையும் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
அதனுடன் கேரட் பட்டாணி சேர்த்து கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும். மிக்ஸியில் தேங்காய் துருவல், சின்ன வெங்காயம், சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். கோஸ் வெந்ததும் அதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து, உப்பும் சேர்த்து கலந்து இறுதியாக வேகவைத்த மலர்ந்த மாதிரியான பாசிப்பருப்பு சேர்த்து கலந்து விடவும். இரண்டு நிமிடங்கள் மூடி போட்டு வதங்கியவுடன் கடைசியாக ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மேலே ஊற்றி இறக்கினால், மிகவும் அருமையான சுவையான சூடான கல்யாண வீட்டு முட்டைக்கோஸ் பொரியல் தயார்.
முட்டைக்கோஸ் போண்டா
தேவையான பொருட்கள்:
முட்டைகோஸ் - 2கப்
வெங்காயம் -கால் கப்
கடலை மாவு - 1/4 கப்
உப்பு -இரண்டு டீஸ்பூன்
மிளகாய் தூள் -ஒரு ஸ்பூன்
தனியா தூள் -ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் -ரெண்டு டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் -பொரிப்பதற்கு
செய்முறை:
முட்டைக்கோஸ் வெங்காயம் இவற்றை பொடியாக நறுக்கவும்.
இதனுடன் உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், கடலை மாவு, தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து பிசறி நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கலக்கி சூடான எண்ணெயில் போண்டாவாக கிள்ளிபோட்டு பொரித்து எடுக்கவும் சுவையான முட்டைக்கோஸ் போண்டா தயார். தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட ருசி அள்ளும்.