
சின்ன வெங்காய ஊறுகாய்
செய்ய தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் உரித்து நறுக்கியது- ஒரு கப்
வறுத்து பொடித்த மிளகாய் தூள்- ஒரு டேபிள் ஸ்பூன்
வறுத்து பொடித்த வெந்தயம் -அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -அரை டீஸ்பூன்
கடுகு -தாளிக்க தேவையான அளவு
எண்ணெய், உப்பு -தேவைக்கேற்ப
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயத்தை நன்றாக வதக்கவும். வதங்கியதும் உப்பு சேர்த்து நன்றாகக்கிளறி கீழே இறக்கி வைத்து மிளகாய்ப்பொடி, வெந்தயப்பொடி அனைத்தையும் அதில் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு ஆறவும் எடுத்து வைக்க வேண்டியதுதான்.
பூரண ரோல் ஆப்பம்
செய்ய தேவையான பொருட்கள்:
சோள மாவு- ஒரு கப்
மைதா மாவு -ஒரு கப்
தேங்காய் எண்ணெய், உப்பு தேவையான அளவு
பூரணம் செய்ய தேவையான பொருட்கள்:
பாசிப்பயறு வேகவைத்து மசித்தது- கால் கப்
தேங்காய்த் துருவல்- கால் கப்
வெல்லத் துருவல் -கால் கப்
ஏலப்பொடி- சிறிதளவு
செய்முறை:
சோளமாவையும், மைதா மாவையும் சிறிது உப்பு சேர்த்து கலந்து நன்றாக ஆப்பம் ஊற்றும் அளவுக்கு அதிக அளவு தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து வைத்துவிடவும்.
மசித்த பாசிப்பருப்புடன் தேங்காய் துருவல், ஏலக்காய், வெல்லம் மூன்றையும் நன்றாக கலந்து வைத்துவிடவும்.
தோசைக்கல்லை காயவைத்து தோசைக்கல்லின் ஓரத்தில் இருந்து மாவை ஊற்றிக்கொண்டு நடுவில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். ஓரங்களில் எண்ணெய்விட்டு வேகவிட்டு எடுத்து , செய்து வைத்திருக்கும் பூரணத்தை பரவலாக அதில் வைத்து ரோல் செய்து வைத்துவிடவும்.
இதுபோல் மெல்லிய ஆப்பங்களாக பொறுமையுடன் சுட்டு எடுத்து பூரணத்தை நடுவில் வைத்து ரோல் செய்து வீட்டினருக்கு பரிமாறவும். இந்தப் பூரண ரோல் ஆப்பம் சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும். இந்த ஆப்பத்தை தோசைக்கல்லில்தான் செய்ய வேண்டும். சாதாரண அரிசி மாவு ஆப்பம்போல் ஆப்ப சட்டியில் ஊற்றி சுழற்சி வேகவைத்தால் நடுவில் குண்டாகி ரோல் செய்ய வராது.