
ராஜஸ்தானி சுர்மா லட்டு:
கோதுமை மாவு 1/4 கிலோ
ரவை 1/4 கப்
சர்க்கரை 150 கிராம்
நெய் 1 கப்
பொரிக்க எண்ணெய்
கிராம்பு பொடித்தது 1/2 ஸ்பூன்
ஏலக்காய் பொடித்தது 1/2 ஸ்பூன்
ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு ரவை நெய் சேர்த்து நன்கு கலக்கவும். அதில் வெதுவெதுப்பான தண்ணீரை சிறுதாக சேர்த்து பிசையவும். சிறிது ஆறியதும் அதனை சிறிய உருண்டைகளாக பிரித்து உள்ளங்கையால் தட்டையாக்கவும்.
வாணலியில் எண்ணெய் வைத்து சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து செய்து வைத்த உருண்டைகளை எண்ணெயில் போட்டு வறுத்தெடுக்கவும் நன்கு ஆறியதும் அவற்றை கையால் நொறுக்கி துண்டுகளாக்கவும் நைஸ் ஆக இல்லாமல் கரடுமுரடான பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் போடவும். அதில் பிடித்த சர்க்கரை பொடித்த கிராம்பு, ஏலக்காய் சேர்த்து நன்கு கலக்கவும். இதில் உருக்கிய நெய்யை சேர்த்து நன்கு கலந்து கையால் இறுக்கமான உருண்டைகளாக உருட்டவும் இதில் நமக்கு பிடித்தமான பாதாம் திராட்சை முந்திரி போன்ற துண்டுகளை வெயில் வறுத்து சேர்த்து பிடிக்கலாம் மிகவும் ருசியான ராஜஸ்தான் சுர்மா லட்டு தயார்.
ஜோத்புரி மிர்ச்சி வடை:
பஜ்ஜி மிளகாய் 6
ஸ்டஃபிங் செய்ய:
உருளைக்கிழங்கு வேகவைத்தது 4
வெங்காயம் 1
உப்பு தேவையானது பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் 1
மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் 1 ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் 2 ஸ்பூன்
ஆம்சூர் பொடி 1 ஸ்பூன்
இஞ்சி விழுது 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி சிறிது
உருளைக்கிழங்கை வேகவைத்து தண்ணீரை வடித்து, தோலை நீக்கிவிடவும். பின்பு கைகளால் நன்கு மசித்து கொள்ளவும். பஜ்ஜி மிளகாயை நீளவாக்கில் கீறி அதனுள் இருக்கும் விதைகளை எடுத்துவிடவும்.
ஸ்டஃப் செய்ய வாணலியில் எண்ணெய் இரண்டு ஸ்பூன் விட்டு சீரகத்தைப் போடவும். சீரகம் பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி விழுது ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியதும் தேவையான உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், ஆம்சூர் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். கடைசியாக அதனுடன் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்கு கலந்துவிடவும். கடைசியாக பொடியா நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து சிறிது ஆறவிடவும்.
விதை நீக்கிய பஜ்ஜி மிளகாயில் தயாரித்த மசாலாவை அடைக்கவும். அனைத்து மிளகாய்களையும் மசாலாக்கள் அடைத்து தனியாக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு 1/2 கப், மஞ்சள் தூள், உப்பு, பேக்கிங் சோடா 2 சிமிட்டு கலந்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும். அதில் ஸ்டஃப் செய்து வைத்துள்ள மிளகாய்களை முக்கி எடுத்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
சூடான டீ அல்லது காபியுடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.