டேஸ்ட்டி சீனிக்கிழங்கு குக்கீஸ்!

Tasty Sweet Potato Cookies!
Tasty Sweet Potato Cookies!
Published on

தேவையான பொருட்கள்:

வேகவைத்த சீனிக்கிழங்கு – 2, சத்து மாவு (all flours) – 3 கப், மோர் – ½ கப், நாட்டு சர்க்கரை – 1 கப், பேக்கிங் சோடா – ½ டீஸ்பூன், பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன், வெண்ணெய் – 1 கப், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் சத்துமாவு, நாட்டு சர்க்கரை, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, சிறிது உப்பு போட்டு சேர்த்து கலக்கவும். பின்னர் இத்துடன் வெண்ணெயை நன்கு மிக்ஸ் செய்யவும்.

வேகவைத்த சீனிக்கிழங்கின் தோல் நீக்கி ஒரு தட்டில் வைத்து நன்றாக மசித்து வைத்துக்கொள்ளவும். பிறகு அதனுடன் கொஞ்சம் மோர் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். முதல் கலவையுடன் இதையும் சேர்த்து மீண்டும் நன்றாக பிசையவும்.

இதையும் படியுங்கள்:
உடலுக்கு ஆரோக்கிய பலம் தரும் பைன் நட்ஸ்!
Tasty Sweet Potato Cookies!

சிறுசிறு வட்டமான குக்கீஸ் ஷேப்பில் இந்த சீனிக்கிழங்கு கலவையிலிருந்து வெட்டி எடுத்து பேக்கிங் ட்ரேயில் வைக்கவும். மைக்ரோ அவனில், 225c இல் பேக்கிங் ட்ரேயை சுமார் பத்து நிமிடங்கள் வைத்து வெளியே எடுத்து குளிர விடவும். இப்போது அருமையான குக்கீஸ் ரெடி.

சாப்பிட சுவையாகவும், சத்தாகவும் இருக்கும் இந்த சீனிக்கிழங்கு குக்கீஸ்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com