உடலுக்கு ஆரோக்கிய பலம் தரும் பைன் நட்ஸ்!

Pine nuts give health strength to the body
Pine nuts give health strength to the body

பைன் நட்ஸ்ஸானது மத்திய தரைக்கடல் பகுதியில் விளையும் ஒரு உண்ணக்கூடிய பருப்பு ஆகும். இப்படி ஒரு பருப்பு இருப்பதும் அதன் விலையும் கூடுதல் என்ற விவரமும் பெரும்பாலானோர்க்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது உண்மை. அப்படிப்பட்ட பைன் நட்ஸிலிருக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

பைன் நட்ஸில் உள்ள வைட்டமின் E, K, B காம்ப்ளெக்ஸ், இரும்புச்சத்து,  மக்னீசியம், சிங்க், புரோட்டீன், ஆன்டி ஆக்சிடன்ட்கள், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உடலுக்கு முழு ஆரோக்கியம் அளித்து உடலை அதிக ஆற்றலுடன் வைக்க உதவுகின்றன. முடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி முடி உடைவதை தடுக்கின்றன. செரிமானத்தை சீராக்குகின்றன.

இதிலுள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்து இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

பைன் நட்ஸில் கண்களுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய லூட்டின் மற்றும் ஜியாக்சாண்டின் என்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் கண்களின் பார்வைத் திறன் அதிகரிக்கிறது.

பைன் நட்ஸில் உள்ள வைட்டமின் K யானது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு நோய்கள் வராமல் தடுப்பதோடு எலும்புகளை வலுவாகவும் வைக்கிறது.

இதிலுள்ள மக்னீசியம் மற்றும் துத்தநாகமானது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி அறிவாற்றல் மற்றும் ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்கின்றன.

இதையும் படியுங்கள்:
உடல் உஷ்ணத்தை சீராக்க உதவும் எட்டு வகை  இனிப்புகள்!
Pine nuts give health strength to the body

மேலும், இதிலுள்ள பினோலெனிக் அமிலமானது ஆரோக்கியம் தரும் கொழுப்புகளின் அளவை அதிகரிக்கச் செய்து இரத்தத்திலுள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து இதய நோய் வராமல் தடுக்கிறது.

பைன் நட்ஸில் பாலிஃபினால் என்ற சக்தி வாய்ந்த தாவர ரசாயனம் கொண்ட ஆன்டிஆக்சிடன்ட்கள் உள்ளன. இவை நம் உடல் வயதான தோற்றம் பெறுவதை தாமதப்படுத்தவும், உடலில் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.

இத்தனை உயர்ந்த அளவு நற்பயன்களைக் கொண்டுள்ள பைன் நட்ஸ்களை அடிக்கடி சிறிதளவில் உட்கொண்டு நன்மை பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com