தனித்துவம் வாய்ந்த தக்காளி குருமா இப்படி செய்ததுண்டா?

தக்காளி குருமா
தக்காளி குருமாwww.youtube.com

ஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள் எதுவும் சேர்க்காமல் மிளகையும் பச்சை மிளகாயையும் மட்டுமே காரத்திற்கு சேர்ப்பதுதான் - இந்த குருமாவின் தனித்துவமான ருசிக்கு காரணம். வாருங்கள், எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

அரைக்க:
தேங்காய் துருவல் - 1/2 கப்
முந்திரி பருப்பு - 10
பொட்டுக்கடலை - 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 6
மிளகு - 1 தேக்கரண்டி
பூண்டு - 6 பல்
இஞ்சி - 2 சிறிய துண்டுகள்
சோம்பு - 1 ஸ்பூன்

தாளிக்க:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
ஏலக்காய் - 2
பட்டை- 2
கிராம்பு - 2
கல்பாசி - 1 சிறிய துண்டு
மிளகு - 1/2 ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு.

வதக்க:
வெங்காயம் - 2
தக்காளி - 3
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு.

செய்முறை:

ரைக்க வேண்டிய  அனைத்து பொருள்களையும் மிக்ஸியிலிட்டு கொஞ்சமாகத் தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து
தாளிக்க வேண்டிய மசாலா பொருட்களை எண்ணெயிலிட்டு பொரிந்து சிவந்தவுடன், பொடியாக நறுக்கிய  வெங்காயத்தைச் சேர்த்து 3 நிமிடங்கள் நன்றாக வதக்கி விடவு‌ம் தொடர்ந்து நறுக்கிய தக்காளியைச் சேர்த்து 2 நிமிடங்கள் லேசாக வதக்கினால் போதும். தக்காளி ஆங்காங்கே பார்ப்பதற்கு தெரிய வேண்டும்.

இதையும் படியுங்கள்:
கலப்படமற்ற வெல்லம் வாங்குவது எப்படி?
தக்காளி குருமா

தக்காளி வதங்கியதும்  அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதுடன் 3 கப் தண்ணீரையும்  ஊற்றி, தேவையான உப்பு சேர்த்து  நன்றாக கலந்து விட்டு குக்கரை மூடி 3 விசில் வைத்து விடுங்கள். அவ்வளவுதான்.

பிரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து பொடியாக நறுக்கிய  கொத்தமல்லி தழைகளைத் தூவி சுடச்சுட சாப்பிட்டு பாருங்கள். இதன் ருசி அட்டகாசமாக இருக்கும்.

இந்த குருமாவை சாதத்துடன் கலந்தும் சாப்பிடலாம். இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி எதற்கு வேண்டு மென்றாலும் சைட் டிஷ் ஆகவும் வைத்துக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com