தெலங்கானாவின் பாரம்பரிய உணவு ‘சர்வ பிண்டி’!

சர்வ பிண்டி...
சர்வ பிண்டி...
Published on

தெலங்கானாவில் அநேகமாக அனைத்து வீடுகளிலும் செய்யப்படும் பாரம்பரிய பலகாரம் சர்வ பிண்டி. அரிசி மாவுடன் கடலைப் பருப்பு எள் சேர்த்து செய்யப்படும் உணவு. இது வட்ட வடிவிலான அப்பம் (கேக்) போன்றதாகும். இது நல்கொண்டா மாவட்டத்தில், "தப்பால செக்கா" என்றும், கரீம்நகரில் "சர்வ பிண்டி" என்றும் அழைக்கப்படுகிறது. எண்ணெயில் பொரிக்காமல் தயாரிக்கப்படுவதால் இது ஒரு ஆரோக்கிய உணவும் கூட இந்த ரெசிபியின் செய்முறையை பார்ப்போம்.

தேவை:

அரிசி மாவு - 1 கப்

கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் (ஊற வைத்தது)

எள் - 2 டேபிள் ஸ்பூன்

வரமிளகாய் பொடி – 1 டேபிள் ஸ்பூன்

கருவேப்பிலை – சிறிது

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

அரிசி மாவுடன் ஊறவைத்த கடலைப் பருப்பு, எள், மிளகாய் பொடி உப்பு, கருவேப்பிலை சேர்த்து சப்பாத்தி மாவை விட கொஞ்சம் தளர்த்தியாக பிசைந்து கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
உண்மைச் சம்பவம்: ஜொலித்த நன்றியுணர்வு!
சர்வ பிண்டி...

ஒரு பாத்திரத்தில் எண்ணெயை நன்றாக பாத்திரம் முழுவதுமாக தடவி பின் பிசைந்த மாவை பாத்திரத்தின் எல்லா பக்கங்களிலும் பரவும்படி மெல்லியதாகத் தட்டி பின் அதில் சிறிய ஓட்டைகள் செய்து எண்ணெயை விட வேண்டும் இந்தப் பாத்திரக்கலவையை அடுப்பில் நிதானமான தீயில் மூடி போட்டு வேகவிட்டு சிவந்தவுடன் தோசை கரண்டியால் மெதுவாக எடுக்க வேண்டும் இது அப்படியே பாத்திர வடிவிலேயே வெளியில் வந்துவிடும். இந்த பலகாரம் மொறுமொறுப்பாக செம டேஸ்டாக இருக்கும் மிளகாய் பொடிக்கு பதில் பச்சை மிளகாயை அரைத்தும் சேர்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com