வீட்டில் செய்யும் தயிர் சாதம் ஏன் கோவில் சுவையில் இருப்பதில்லை? இதோ அந்த 'சீக்ரெட்' டிப்ஸ்!

creamy-curd-rice
creamy-curd-rice
Updated on

ம் வீடுகளில் எந்த விதத்தில் தயிர் சாதம் செய்தாலும் கோவிலில் செய்வதுபோல் இருக்காது. மேலும் தயிர் ஒரு ப்ரோபயாட்டிக் உணவாக இருப்பதால் செரிமானத்தை மேம்படுத்துகிறது. கால்சியம், புரதம், வைட்டமின் நிறைந்த தயிர் உடல் வெப்பத்தை குறைக்கிறது.

ஆரோக்கியத்திற்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் தயிர் மிகவும் உதவியாக உள்ளது. தினசரி தயிர் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புற்று நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. மேலும் உடலை குளிர்ச்சியாக வைத்திருகவும் உதவுகிறது. குறைந்த கலோரி மற்றும் அதிக புரோட்டீன் இருப்பதால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு தயிர் மிகவும் உதவுகிறது.

தயிர் சாதம் செய்வதற்கு தயிர் அதிகமாக புளித்திருக்கக் கூடாது ஃப்ரெஷ்ஷான தயிரில் செய்வது அதிக சுவையை தரும். கடைகளில் தயிர் வாங்கி செய்வதை காட்டிலும் நாம் வீட்டிலேயே உரை ஊற்றி வைத்து செய்வது மிகுந்த ஆரோக்கியமானதாகவும் சுவை மிகுந்ததாகவும் இருக்கும். இந்தக்கோடை காலத்திற்கு ஏற்ற உடலுக்கு குளிர்ச்சியை தரும் கிரீமியான கோயில் ஸ்டைல் தயிர் சாதம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
வெயிட் லாஸ் செய்யணுமா? - இதோ அதிக புரதச்சத்து நிறைந்த கினோவா பாசிப்பருப்பு தோசை!
creamy-curd-rice

தேவையான பொருட்கள்:

அரிசி - 300 கிராம்

தயிர் - 150 கிராம்

இஞ்சி - சிறிதளவு

பச்சை மிளகாய் - சிறிதளவு

வத்தல் - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு - தேவையான அளவு

மிளகு - தேவையான அளவு

கருவேப்பிலை - தேவையான அளவு

மல்லித்தழை - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசியை நன்கு கழுவி 30 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும். நன்கு அரிசி உரியவுடன் ஒரு பாத்திரத்தில் சேர்த்து தேவையான அளவு நீர் ஊற்றி கொலைந்து மென்மையாக வரும்வரை வேகவைக்க வேண்டும். சாதம் நன்கு வெந்து வந்தவுடன் வடிகட்டி சூடான பதத்திலேயே ஒரு கரண்டியை வைத்து நன்கு மசித்து கிளறி விடவேண்டும்.

இதையும் படியுங்கள்:
தஞ்சாவூர் ஸ்பெஷல் ஒரப்பு அடை & வேப்பம்பூ சட்னி: நாவூறும் பாரம்பரிய ரெசிபி!
creamy-curd-rice

ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு நன்கு பொறிந்து வந்தவுடன் கருவேப்பிலை, சிறியதாக வெட்டிய இஞ்சி, பச்சை மிளகாய், வத்தல், இடித்த மிளகு சேர்த்து வதக்க வேண்டும். சுத்தமான பசும்பாலில் இருந்து எடுத்த தயிரை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் தயிர் சாதம் மிகவும் கிரீமியாகவும் கோயில் சுவையிலும் இருக்கும். வேகவைத்த சாதத்தில் தயிரை ஊற்றி தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ள வேண்டும்.

பின் அதனுடன் தாளிப்பை சேர்த்து தேவையான அளவு மல்லித்தழை சேர்த்து நன்கு கிளறி விடவேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் கிரீமியான கோயில் ஸ்டைல் தயிர் சாதம் தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com