

தஞ்சாவூர் ஒரப்பு அடை
தேவையான பொருட்கள்:
1.புழுங்கல் அரிசி ½ கப்
2.பச்சரிசி ½ கப்
3.துவரம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
4.கடலைப் பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
5.உளுத்தம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
6.காய்ந்த சிவப்பு மிளகாய் 5
7.பெருங்காய தூள் 1 சிட்டிகை
8.தேங்காய் துருவல் ¼ கப்
9.கறிவேப்பிலை ஒரு இணுக்கு
10.கொத்தமல்லி இலை ஒரு கைப் பிடி
11.பொடிசா நறுக்கிய சின்ன வெங்காயம் 10
12.உப்பு தேவையான அளவு
13.எண்ணெய் தேவையான அளவு
14.தோல் சீவி துருவிய சுரைக்காய் ¼ cup
செய்முறை:
அனைத்து அரிசி பருப்பு வகைகள் மற்றும் மிளகாய்களை ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு நீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். அதனுடன் உப்பு பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் கொர கொரப்பாக அரைத்தெடுக்கவும். அரைத்த மாவில் தேங்காய் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லி, துருவிய சுரைக்காய் மற்றும் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின் அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடாக்கவும். சூடான தோசை கல்லில் கலந்து வவைத்த மாவை ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு, சற்று தடிமனான அடைகளாக மொறு மொறுவென்று ஆகும் வரை சுட்டு எடுக்கவும். தேங்காய் சட்னி, மிளகாய்ப் பொடி + எண்ணெய், வெல்லம் + வெண்ணெய் இவற்றில் ஏதாவது ஒன்றை தொட்டு அடையை சாப்பிடலாம்.
நீம் ஃபிளவர் சட்னி ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.புதிதாக மலர்ந்த வேப்பம் பூ ஒரு கைப்பிடி
2.உளுத்தம் பருப்பு 2 டீ ஸ்பூன்
3.கடலைப் பருப்பு 2 டீ ஸ்பூன்
4.இஞ்சி ஒரு சிறு துண்டு
5.கறிவேப்பிலை 1 இணுக்கு
6.நசுக்கிய பூண்டுப் பல் 10
7.காய்ந்த ரெட் சில்லி 5
8.புளி சிறிதளவு
9.உப்பு தேவையான அளவு
10.வெல்லம் ஒரு சிறு துண்டு
11.தேங்காய் துருவல் ⅓கப்
12.தேங்காய் எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
ஒரு அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கவும். அதில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றவும். பின் வேப்பம் பூவை எண்ணெயில் போட்டு சிறு தீயில் பூ சிவக்கும்வரை வறுக்கவும். பின் சிவந்த பூக்களை எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். அதே கடாயில் உள்ள எண்ணெயில் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்க்கவும். அவை பொன்னிறமாக வறுபட்டதும் அதனுடன் இஞ்சி பூண்டை நறுக்கி சேர்க்கவும். பிறகு கறிவேப்பிலை, சிவப்பு மிளகாய், புளி சேர்த்து கிளறிவிடவும். அடுப்பை அணைத்துவிட்டு, தேங்காய் துருவல், உப்பு, வெல்லம் ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும். அதனுடன் வறுத்து வைத்த வேப்பம் பூவையும் சேர்த்துக்கொள்ளவும்.
அனைத்துப் பொருட்களும் நன்கு ஆறிய பின் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி கொஞ்சம் கொர கொரப்பாக இருக்கும்படி அரைத்து எடுக்கவும். நீம் ஃபிளவர் சட்னி தயார். இதை சாம்பார் சாதத்துக்கு தொட்டுக்கொள்ளலாம். இட்லி தோசையுடனும் சேர்த்து உண்ணலாம். சிறிது கசப்பு சுவையுடைய வேப்பம் பூ
சட்னி வயிற்றிலுள்ள புழுக்கள் மற்றும் நச்சுக்கள் வெளியேற உதவி புரியும்.