வீட்டிலேயே செய்யலாம் விதவிதமான தித்திக்கும் பால்கோவா!

The amazing Balkova!
The amazing Balkova!
Updated on

பனீர் பால்கோவா

தேவை:

பனீர் - 1 பாக்கெட்

கோவா - 100 கிராம்

சர்க்கரை - ½ கப்

தேங்காய் துருவல் - ¼ கப்

வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் தேங்காயைத் துருவி எடுத்துக்கொள்ளவும். பின்பு வாணலியை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் துருவலை லேசாக சூடுப்படுத்திக்கொள்ளவும்.

அதன் பின்பு பனீரை எடுத்து மிக்சிஜாரில் போட்டு அரைத்து எடுத்து கொள்ளவும். மேலும் அதே மிக்சிஜாரில் சர்க்கரையை போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

அதனையடுத்து பாத்திரத்தில் தேங்காய் துருவல், பனீர் துருவல், கோவா, சர்க்கரை தூள், வெனிலா எசன்ஸ் சேர்த்து கரண்டியால் நன்கு கலந்து கொள்ளவும். ருசியான பன்னீர் பால்கோவா உருண்டை தயார்.

நாட்டுச் சர்க்கரை பால்கோவா

தேவை:

பால் - 1 லிட்டர்

நாட்டு சர்க்கரை - 150 கிராம்

நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான தீயில் காய்ச்சவும். பால் பாதியாகக் குறையும்வரை அவ்வப்போது கிளறிக் கொண்டே இருக்கவும்.

பால் கெட்டியானதும், நாட்டு சர்க்கரையைச் சேர்த்து நன்கு கிளறவும். சர்க்கரை கரைந்து, கலவை மேலும் கெட்டியாகும் வரை தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவும். அடுப்பை அணைப்பதற்கு முன், சிறிது நெய் விட்டு கிளறலாம். கலவை திக்காகி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது, அடுப்பை அணைத்து, ஆறவிடவும். சுவையான நாட்டுச் சர்க்கரை பால்கோவா ரெடி.

இதையும் படியுங்கள்:
தூதுவளையில் 4 ருசியான ரெசிபிகள் - ஆரோக்கியமான விருந்து இதோ!
The amazing Balkova!

முந்திரி - தேங்காய் பால்கோவா

தேவை:

பால் - 1 லிட்டர்

குங்குமப்பூ - ஒரு சிட்டிகை

சர்க்கரை - 2 கப்

ஊற வைத்த முந்திரி - 10

தேங்காய்த் துருவல் - ஒரு கப்

நெய் - 4 டீஸ்பூன்

ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை:

அடி கனமான பாத்திரத்தில் பாலை விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறிக் கொண்டே இருக்கவும். பால் பாதியாகும் அளவுக்கு சுண்டக் காய்ச்சவும்.

முந்திரி, தேங்காய் துருவலை சேர்த்து அரைத்து, காய்ச்சிய பாலுடன் கலந்து, மீண்டும் பாதியாக வந்ததும், சர்க்கரை சேர்த்துக் கெட்டியாகக் கிளறவும். ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ போட்டு, நெய் விட்டு, சிறிது நேரம் கிளறி இறக்கவும். சூப்பர் சுவையில் முந்திரி - தேங்காய் பால்கோவா தயார்.

ஆப்பிள் பால்கோவா

தேவை:

ஆப்பிள் – 2 (துருவியது)

பால் – 2 கப்

பனங்கற்கண்டு தூள் – 3 டேபிள் ஸ்பூன்

நெய் – 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் தூள் – ¼ டீஸ்பூன்

முந்திரி, திராட்சை – தேவையான அளவு

செய்முறை:

கடாயில் நெய் சேர்த்து துருவிய ஆப்பிளை சிறிது நேரம் வதக்கவும். பின்னர் அதனுடன் பால் சேர்த்து நடுத்தர தீயில் கொதிக்கவிடவும்.

பால் கெட்டியாக ஆரம்பித்தவுடன் பனங்கற்கண்டு தூள் சேர்த்து கலக்கவும். வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள் சேர்த்து, கெட்டியான பால்கோவா பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும். அசத்தல் சுவையில் ஆப்பிள் பால்கோவா ரெடி.

logo
Kalki Online
kalkionline.com