
தட்டை, சீடை
தேவையானவை:
ஒரு கிலோ புழுங்கல் அாிசி,
காய்ந்த மிளகாய் வத்தல் 15.
பெருங்காயத்தூாள் ஒரு மேசைக்கரண்டி, கருவேப்பிலை கொஞ்சம்.
கடலைப்பருப்பு ,பயத்தம் பருப்பு, தலா 25கிராம்,
பொட்டுக்கடலை கால்கிலோ,
தேவையான அளவு உப்பு,
பொாித்து எடுக்க ஆயில் ஒரு லிட்டா்
செய்முறை:
முதலில் அரிசியை மூன்று மணிநேரம் ஊறவைத்து களைந்துவிடவும். அதனுடன் கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பையும், தனியாக ஒரு மணிநேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்,
பொட்டுக்கடலையை லேசாக சூடு செய்து மிக்சியில் போட்டு பவுடராய் எடுத்துக்கொள்ளவும்.
ஊறவைத்த அரிசியுடன் காய்ந்தமிளகாய் உப்பு போட்டு நைசாக அரைத்துக்கொள்ளவும், பின்னர் பொட்டுக்கடலைமாவுடன் அரைத்துவைத்த அரிசிமாவு, காயப்பவுடா், கறிவேப்பிலை, ஊறவைத்த பருப்புவகைகளை சோ்த்து நன்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் ஒரு கடாயில் எண்ணையை ஊற்றி, நன்கு காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாய் எடுத்து தட்டி எண்ணையில் போட்டு பொாித்து எடுக்கவும் கரகரப்பான டேஸ்ட்டான மாலை (தட்டை சீடை) நேர ஸ்நாக்ஸ் ரெடி
பி.கு: (விருப்பட்டால் கருப்பு எள் ஊறவைத்து மாவில் கலந்து கொள்ளலாம்) பதினைந்து நாட்கள் வரை வைத்திருக்கலாம்
முள்ளு முறுக்கு (மகிழம்பூதேன்குழல்)
தேவையானவ:
பச்சை அாிசி ஒரு கிலோ,
பயத்தம் பருப்பு, கடலைப்பருப்பு தலாநூறு கிராம்.
பொட்டுக்கடலை ஐம்பதுகிராம்,
எள்ளு இரண்டு டேபிள் ஸ்பூன், காயப்பவுடர் கொஞ்சம், தேவையான அளவு உப்பு, பொாித்து எடுக்க ஆயில் ஒரு லிட்டர்.
செய்முறை:
பருப்புவகைகளை லேசாக சூடுவரும் வரை வறுத்து எடுப்பதுடன், பச்சரிசியையும் சோ்த்து மில்லில் கொடுத்து அரைத்து மாவாக்கிக் கொள்ளவும்.
அரைத்த மாவுடன் எள், காயப்பவுடர் மற்றும், உப்பு சோ்த்து தண்ணீா் விட்டு நன்கு முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
வானலியில் எண்ணைய் விட்டு சூடானதும் முறுக்கு அச்சில் மாவைப்போட்டு, எண்ணையில் பிழிந்து இரண்டு பக்கமும் புரட்டிப்போட்டு எடுக்கவும். நல்ல சுவையான டேஸ்ட்டான, முள்ளு, தேன்குழல் தயாா் கரகரப்பு மற்றும் சுவைக்கு பஞ்சமிருக்காது. (ஒருமாதமானாலும் கரகரப்பு குறையாது).