
முருங்கைப்பூ திணை பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்:
முருங்கைப்பூ -ஒரு கப்
திணை அரிசி- அரை கப்
பயத்தம் பருப்பு- அரை கப்
மிளகு- ஒரு டீஸ்பூன்
சீரகம்- ஒரு டீஸ்பூன்
நெய் ஒரு- டேபிள் ஸ்பூன்
எண்ணெய் -ஒரு டீஸ்பூன்
பெரிய வெங்காயம் -ஒன்று அரிந்தது
உப்பு -தேவைக்கு ஏற்ப
செய்முறை:
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய்விட்டு சீரகம், மிளகு தாளிக்கவும். பின்னர் வெங்காயத்தை வதக்கி அதனுடன் கழுவி வைத்திருக்கும் திணை அரிசி, பருப்பை அதில் சேர்த்து முருங்கை பூவையும் சேர்த்து உப்பு போட்டு நன்றாக கிளறி மூன்று கப் தண்ணீர் விட்டு மூன்று விசில் விட்டு எடுக்கவும்.
முருங்கைக்கீரை திணைப்பொங்கல் ரெடி. சாப்பிட அருமையாக இருக்கும். அதனுடன் தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிட சுவையள்ளும்.
பயத்த மாவு லாடு
செய்ய தேவையான பொருட்கள்:
வறுத்து அரைத்த பயத்தம் பருப்பு மாவு -2 கப்
சர்க்கரை -2 கப்
ஏலத்தூள்- ஒரு டீஸ்பூன்
உடைத்த முந்திரி நெய்யில் வறுத்தது- கைப்பிடி அளவு
நெய் -6 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
சர்க்கரையை நன்றாக பொடித்து வைக்கவும். வாயகன்ற பாத்திரத்தில் மாவு, பொடித்த சர்க்கரை, ஏலப்பொடி, முந்திரி ஆகியவற்றை கலந்து நெய்யை சூடாக்கி மாவில் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாக கலந்துவிட்டு கை பொறுக்கும் சூட்டுடன் உருண்டைகளாக பிடித்து வைக்கவும். உருண்டைகள் ஆறியவுடன் எடுத்து வைக்கவும். பயத்தம்மாவு லாடு ரெடி.
சிவப்பு அரிசி வகைகளில் உள்ள பொதுவான நன்மைகள்!
இப்பொழுது அதிகமானோர் நம் பாரம்பரிய அரிசி வகைகளான சிவப்பு அரிசி வகைகளை அவ்வப்போது சமைத்து உண்ண ஆவல் கொண்டிருக்கின்றனர். காரணம் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வுதான். அந்த அரிசி வகைகளில் உள்ள பொதுவான பண்புகள் என்ன என்பதை இப்திவில் காண்போம்.
சிவப்பு வகை அரிசிகளில் செரிமானம் மெதுவாக நடப்பதால் பசி எடுப்பது தாமதம் ஆகும். இதனால் உணவு எடுத்துக் கொள்ளும் அளவு தானாகவே குறையும் .மேலும் குறைந்த அளவு சாப்பிட்டாலே நிறைய சாப்பிட்டதுபோல் திருப்தி ஏற்படும். ஆசைப்பட்டாலும் அளவுக்கு அதிகமாக சாப்பிட முடியாதது ஒரு பெருத்த காரணம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது. இந்த அரிசியில் வித்தியாசமான கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதால் அவர்களின் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.
நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகம் உள்ளதால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
குறிப்பாக இரும்பு சத்து ரத்தசோகை உள்ளவர்களுக்கு சிறந்த அரிசி இது. அதிக துத்தநாகம் சருமத்தை பளபளப்பாக்குவதுடன், மோசமான தோல் நிலைகளுக்கும் சிகிச்சை அளிக்க உதவுகிறது.
உடலுக்கு அபரிமிதமான பலத்தை அளிப்பதுடன் ஆற்றலை அதிகரிக்க செய்கிறது. நரம்புகளுக்கு வலு சேர்ப்பதோடு உடலுக்கு வலிமை சேர்க்கிறது. மூளையை சுறுசுறுப்பாக்கும் தன்மை இந்த வகை அரிசிகளுக்கு அதிகம் உண்டு.
மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செல் மீளுரு வாக்கம் செய்வதில் வேலை செய்கிறது. உடலை உற்சாகப்படுத்துகிறது.
கல்லீரல் பாதிப்புகளை குறைக்கிறது. வீக்கத்தை குறைக்கிறது. ஆஸ்துமாவின் தாக்கத்தை குறைக்கிறது. இதய சுவரின் (Atherosclerosis) கொழுப்பு படிவங்களை குறைக்கிறது மேலும் மாரடைப்பில் இருந்து காக்கிறது. புற்றுநோயை தடுக்க உதவுகிறது.
கர்ப்பகாலத்தில் பூங்கார் அரிசி போன்ற பாரம்பரிய அரிசி வகைகள் ஆரோக்கியமான குழந்தை பேற்றுக்கு வழி வகுக்கிறது. வியர்வை சுரப்பிகளை நன்றாக தூண்டி வியர்வையை வெளியேற்ற செய்கிறது.