உளுந்து வடையில் ஒளிந்திருக்கும் உண்மைகள்..!

உளுந்து வடை...
உளுந்து வடை...

மிழர்களின் உணவில்  வடைக்கு என்றுமே முக்கியத்துவம் உண்டு அதில் ஸ்பெஷல் உளுந்த வடை. காலை உணவில் சுடச்சுட இட்லி, பொங்கலுடன் உளுந்துவடையை ருசிப்பதே அலாதி சுவைதான்.

பண்டிகைக் காலம், சுபநிகழ்ச்சிகள் என்றாலும் உளுந்து வடை முக்கிய இடம்பெறும். உளுந்து மட்டுமின்றி அதில் போடப்படும் மிளகு, சின்ன வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி என ஏராளமான மருத்துவ குணம் கொண்ட பொருட்களால் இன்னும் சிறப்பாகிறது.

இவைகள் கொண்டு தயாரிக்கப்படும் வடை எளிதில் செரிமானம் ஆகும். காலை நேரத்தை விட மாலை வேளைகளில் மொறுமொறுவென உளுந்து வடையை ருசிக்கலாம். உடல் இளைத்தவர்கள் உளுந்தை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடலை குளிர்ச்சியாக்குவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது உளுந்து.

ஆயுர்வேதத்தின் கூற்றின்படி மாலை வேளைகளில் உடலில் வாதம் அதிகமாக இருக்கும். அதனால் மாலை நேரத்தை `வாதகாலம்' என்று குறிப்பிடுவார்கள். காலையிலிருந்து மாலை வரை பணியாற்றுவதால் அசதி ஏற்படும். அதனால் மாலை வேளையில் உடலுக்கு ஊட்டத்தையும் ஆற்றலையும் தருகிற சிற்றுண்டியையே உட்கொள்ள வேண்டும். அதற்கு உளுந்து வடை சிறந்தது.

உளுந்தின் பூர்வீகம் தெற்காசியா. இந்தியர்கள் அரிசிக்கு அடுத்தபடியாக அவர்கள் பயன்படுத்துவது  உளுந்தைத்தான். நரம்புகளைப் பலப்படுத்தி உடல் உறுப்புகளை தளர்ச்சியிலிருந்து மீட்கும் ஆற்றலுடையது. தம்மத்துண்டு உளுந்தில் ஆற்றல் மிக்க கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட் , புரதச்சத்தும் உள்ளது. பாலியல் குறைபாடுகளுக்கு உளுந்து அருமருந்து.

உளுந்தைபோல சக்தியூட்டும் தானியம் வேறொன்றுமில்லை. அதன் மகத்துவம் அறிந்துதான் அதை வடையாக தட்டி சாப்பிட்டு வருகிறார்கள். எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்துக்கு உளுந்து உற்ற மருந்து. ஆந்திர மாநிலத்தில் பிரதான தானியம். அங்கு சகல வழிபாடுகளிலும் முதலிடம் பெறுகிறது. உளுந்து மகிமை தெரிந்துதான் தென்னிந்திய உணவகங்களில் இட்லி மற்றும் பொங்கலுடன் வடை வைக்கிறார்கள்.

மாதவிடாய் காலங்களில் பெண்களின் வயிற்று வலியை பிரச்சனையை சரிசெய்யவும், இடுப்பு எலும்புகள் வலுப்பெறவும் உளுந்தை தவறாமல் எடுத்துக் கொள்ளவும்.மிக முக்கியமாக தரமான எண்ணெயில் தயாரிக்கப்பட்டதாக  வடை இருக்க வேண்டும்.

வாய்ப்புண், வயிற்றுப்புண், இடுப்பு வலியால் அவதிப்படும் நபர்கள் உளுந்து வடையை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.எனினும் மலச்சிக்கல், செரிமானப் பிரச்சனை, ஆஸ்துமா சளி தொந்தரவு, காய்ச்சல் இருப்பவர்கள் உளுந்து வடையை தவிர்க்கவும்.

குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் உளுந்து வடையை நெய் சேர்த்து தயாரித்து அடிக்கடி சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும் என்கிறது ஆயுர்வேதம்.

உளுந்து வடைக்கான மாவில் சிறிதளவு உருளைக் கிழங்கை வேகவைத்து மசித்து போட்டால் எண்ணெய் குடிக்காமல் வரும், சுவையும் வித்தியாசமாக இருக்கும். வடைக்கு மாவு அரைக்கும்போது நீர் சிறிது அதிகமாகி விட்டால், ஒரு ஸ்பூன் நெய்யை அதில் விடவும். மாவு இறுகி விடும்.கொஞ்சம் கார்ன் பிளாக்ஸ் சேர்த்தாலும் மாவு கெட்டிப்படும்.

தயிர் வடைக்கு உளுத்தம் பருப்புடன். ஆறு முந்திரி பருப்பு சேர்த்து ஊற வைத்து அரைத்தால், அந்த மாவில் செய்யும் வகைகள் மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
அன்பெனும் நீர் ஊற்ற மகிழ்ச்சியும் வெற்றியும் தேடி வரும்!
உளுந்து வடை...

தயிர்வடை செய்யும்போது பொதுவாக வடைகளை வெந்நீரில் போட்டு எடுத்து தயிரில் போடுவார்கள். அப்படி செய்யாமல் சூடான பாலில் சிறிது தோய்த்து எடுத்து தயிரில் போட ருசியும் மாறாது, புளிப்பும் அதிகமாகாது. அத்துடன் மேலே பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, துருவிய கேரட் சேர்த்து பரிமாற கண்ணுக்கும் நாவிற்கும் விருந்தாகும்.

உங்களுக்கு சந்திராஷ்டமம் காலங்களில் ஏதாவது பிரச்சனை நிகழ்ந்த வண்ணம் இருக்கிறதா? அதற்கு கவலை கொள்ள வேண்டாம். அதற்கு எளிய பரிகாரம் ஒன்று உண்டு. அதற்கு சந்திரனுக்கு உகந்த திசையான தென் கிழக்கு திசை நோக்கி சூடு ஆறிய பால் பாயசம், உளுந்து வடை படைத்து வணங்கி வர நல்லது நடக்கும் என்கிறார்கள். ஆந்திரா மாநிலத்தின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று "காரிலு புளுசு" எனும் உளுந்து வடை குழம்பு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com