
வேர்க்கடலை பொடி (The wonders of peanuts!)
தேவையான பொருட்கள்:
வேர்கடலை – 250 கிராம்
கருப்பு எள் – 100 கிராம்
முந்திரிப் பருப்பு – 10 No
மிளகாய் வற்றல் – 10 No
கறிவேப்பிலை – 1 கொத்து
சீரகம் – 2 ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து மிதமான தீயில் மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை சிவக்க வறுக்கவும். வறுத்து எடுத்த பொருட்களை ஒரு தட்டில் ஆறவிடவும். ஆறிய பிறகு உப்பு சேர்த்து, கொர கொரப்பாக அரைத்து, ஆறவைத்து டப்பாவில் போட்டு வைக்கவும்.
தேவைப்படும்போது இட்லி, தோசைக்கு ஏற்ற பொடி. சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்.
வேர்க்கடலை பர்ஃபி
தேவையான பொருட்கள்:
வேர்கடலை – 250 கிராம்
வெள்ளை எள் – 100 கிராம்
முந்திரிப் பருப்பு – 25 No
ஊறவைத்து தோல் நீக்கிய பாதாம் பருப்பு – 25 No.
வெல்லம் – 500 கிராம்
ஏலக்காய் தூள் – 2 சிட்டிகை
நெய் – 5 ஸ்பூன்
செய்முறை:
முதலில் வேர்க்கடலையை வெறும் வாணலியில் வறுத்து, தோலை நீக்கவும். சிறிது நெய் ஊற்றி அதில் வேர்கடலை, வெள்ளை எள், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சிவக்க வறுத்து எடுக்கவும். வறுத்ததை ஆறவைத்து, மிக்ஸியில் பொடியாக அரைக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அழுக்குகளை நீக்கி, பாகு காய்ச்சவும். பாகு ஒரு கம்பி பதம் வந்ததும், பொடியாக அரைத்த கலவையை சேர்த்து நெய் விட்டு நன்குகிளறவும். பர்ஃபி சுருண்டு வரும்போது, நெய் தடவிய தட்டில் ஊற்றி, ஆறவைத்து வில்லைகள் போடவும். குழந்தைகளுக்கு ஏற்ற, சுவையான மற்றும் ஆரோக்கியமான வேர்க்கடலை பர்ஃபி ரெடி!
வேர்க்கடலை மிளகு மிக்ஸ்
தேவையான பொருட்கள்:
பச்சை வேர்கடலை – 1 கப்
மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – சிறிதளவு (கட்டாயம் அல்ல, விருப்பப்படி சேர்க்கலாம்)
செய்முறை:
முதலில் பச்சை வேர்க்கடலையை நன்றாக ஊறவைத்து, பின் குக்கரில் அரை உப்பில் வேகவைத்து எடுக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், வேகவைத்துள்ள வேர்க்கடலையை சேர்த்து நன்கு கிளறவும்.
பின்னர் அதனுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். இப்போது தேங்காய்த் துருவல். சேர்த்து, சிறிது நேரம் கிளறி இறக்கி வைத்து கேரட், மாங்காய் துருவல் தூவி பரிமாறவும்.
மாலை வேளையில் டீ அல்லது காபியுடன் சாப்பிட நல்ல காம்பினேஷனாக இருக்கும் சுவையான, ஆரோக்கியமான
வேர்க்கடலை மிளகு மிக்ஸ் தயார்!
வேர்க்கடலையின் பயன்கள்
சரும பளபளப்பு:
வேர்க்கடலையில் உள்ள எண்ணெய்ச் சத்து சருமத்திற்கு பளபளப்பை தரும்.
சத்துக்கள்:
புரதம்
மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு, ஒமேகா-3 கொழுப்புகள் – இதய ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கின்றன.
நார்ச்சத்து – செரிமானத்திற்கு உதவுகிறது.
தாதுக்கள் – தாமிரம், துத்தநாகம், பாஸ்பரஸ், நையாசின் இருப்பதால்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.