வெயிலுக்கு இதமாக... எளிமையான இந்த இரண்டு வித சர்பத் போதுமே!

மாம்பழ  சர்பத்
மாம்பழ சர்பத்

ருமுறை உறவினர் வீட்டிற்கு சென்ற பொழுது, மரத்திலிருந்து விழுந்திருந்த பழங்களை மிகவும் நார் உள்ளது, கைப்பிடி அளவே இருந்த கனிந்த நாட்டு மாம்பழங்களை ஒரு கூடை நிறைய எடுத்து வைத்திருந்து, அந்த வீட்டிலிருந்த சிறுவன் என்னைப் பார்த்ததும் இதில் நீங்கள் சர்பத் செய்து கொடுத்தே ஆகவேண்டும் என்று அடம் பிடித்தான். வேறு வழி இன்றி செய்தேன். அது மிகவும் டேஸ்டியாக இருந்தது.   அதன் பிறகு எந்த வகை மாம்பழம் கிடைத்தாலும் அதில் ஷர்பத் செய்வதை பழக்கமாக்கிக் கொண்டேன். ருசியில் மாறுபாடு இருந்தாலும், வீட்டில் பழுக்கும் பழங்களை வீணாக்காமல் அதன் இனிப்புக்கு தகுந்தவாறு சர்க்கரை சேர்த்து சமப்படுத்தலாம். இதோ  அந்த நார் மாம்பழ  சர்பத் செய்முறை:

தேவையான பொருட்கள்:

மாம்பழச்சாறு-2 லிட்டர்

ஜீனி-2லிட்டர்

செய்முறை:

மாம்பழங்களை நன்றாக அழுத்தி பிழிய வேண்டும். பிறகு  அந்தச் சாற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வடிகட்டி அதன் நார், தோல், கொட்டை அனைத்தையும் எடுத்து விட வேண்டும். 

மாம்பழச்சாறு அளவுக்கு ஜீனி சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்ச வேண்டும். பாகு தேன் பதத்திற்கு வந்ததும் இறக்கி இளஞ்சூட்டில் பாட்டில்களில் அடைக்க வேண்டியதுதான். 

இந்த சர்பத்தை பாலுடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும். சிறுவன் இடியாப்பத்தில் இதை தொட்டுக்கொண்டு சாப்பிட்டான்.

எலுமிச்சைப்பழ சர்பத்:

செய்ய தேவையான பொருட்கள்:

எலுமிச்சை பழச்சாறு - ஒரு டம்ளர்

சீனி -5 டம்ளர்

செய்முறை:

இரண்டையும் ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி பாட்டிலில் இட்டு வேடு கட்டி, தினசரி வெயிலில் வைத்து மரக்கரண்டியால் அவ்வப்போது கிளறிவிட்டு ,சீனி  எலுமிச்சைச் சாறுடன் நன்றாக கலந்து கரைந்து ஒரு பிசுபிசுப்பு பதம் வரும்.  இப்பொழுது வேடு கட்டிய துணியை எடுத்து விட்டு, பிளாஸ்டிக் மூடி போட்டு எடுத்து வைக்க வேண்டியதுதான்.

எலுமிச்சைப்பழ சர்பத்
எலுமிச்சைப்பழ சர்பத்

நன்றாக கரைந்ததும் மூணு ஸ்பூன் ஷர்பத் எடுத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து சிறிதளவு உப்பு சேர்த்து குடிக்கலாம். நன்னாரி சர்பத்தையும் சேர்த்து குடித்தால் சுவையாக இருக்கும். சப்ஜா விதைகளை ஊற வைத்து  இவைகளுடன் கலந்து குடித்தால் சுவையள்ளும்.  நல்ல குளிர்ச்சி கிட்டும் .செய்வதும் எளிது. அதிக செலவும் ஆகாது. இதை வீட்டில் செய்து வைத்திருந்தால் வரும் விருந்தினர்களுக்கு உடனடியாக கொடுத்து வரவேற்கலாம். 

இதையும் படியுங்கள்:
ஆழ்ந்த சுவாசம் தரும் 10 நன்மைகள் என்னென்ன தெரியுமா?
மாம்பழ  சர்பத்

ஜீனியை சாறுடன் கலந்து அடுப்பில் ஏற்றி காய்ச்சி தேன் பதம் வந்ததும் எடுத்து வைத்தும் உபயோகப்படுத்தலாம். ஒரு வருடமானாலும் கெடாது. கலர் தேன் கலருக்கு வரும் .நாள் ஆக, ஆக  சர்பத்து பாட்டிலை திறக்கும் பொழுது எலுமிச்சை ஊறுகாயில் வரும் மணம் போல்  பாட்டிலில் வரும் என்றாலும், சர்ப்பத்தில் வராது, கெட்டுப் போகாது. ஆரோக்கியத்திற்கு எந்த பிரச்னையும் இதனால் வராது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com