ஆழ்ந்த சுவாசம் தரும் 10 நன்மைகள் என்னென்ன தெரியுமா?

ஆழ்ந்த சுவாசம்
ஆழ்ந்த சுவாசம்https://www.pothunalam.com
Published on

ழ்ந்த சுவாசம் ஒரு அற்புதமான சக்தி வாய்ந்த உடற்பயிற்சி. நேராக உட்கார்ந்து உங்கள் தோள்களை ரிலாஸ்காக வைத்துக்கொள்ளுங்கள். ஆழ்ந்து மூச்சை மெதுவாக உள்ளிழுக்க வேண்டும். வயிறு உயரும் வகையில் மூச்சை எடுத்து சில நொடிகள் மூச்சைப் பிடித்துக்கொள்ளுங்கள். பின் சுவாசத்தை மெதுவாக, வெளியே விடவும். இதுதான் ஆழ்ந்த மூச்சு. இதுதான் உண்மையான மூச்சு. இதன் மூலம் நுரையீரலின் கீழ் பகுதிக்கு நன்கு ஆக்ஸிஜன் கிடைக்கும். இதனால் உடலின் அனைத்து பாகங்களும் வலுப்படுத்தப்படும். இதை ஒரு நாளைக்கு 5 முதல் 10 முறை செய்யவும்.

நன்றாக மூச்சு விடுவது 10 வகையான உடல்நலக் கோளாறுகளை சரி செய்கிறது. கவலை, கோபம், இரத்த சோகை, இதயநோய், அஜீரணம், நரம்புக் கோளாறு, தலைவலி, ஆஸ்துமா போன்ற அனைத்து வகையான பிரச்னைகளை சரி செய்கிறது என்கிறார் கொலராடோ சர்வதேச மூச்சு பயிற்சி நிலைய டாக்டர் ராபர்ட் ஹோல்டன். ஆஸ்துமா, இதயநோய், ஒற்றை தலைவலி, சில வகை வலிப்பு நோய் தாக்குதலுக்கு காரணம் சரியான முறையில் மூச்சு விடாததுதான் என்கிறார்கள்.

எந்த வேலையைத் தொடங்கினாலும் அதற்கு முன் சற்று மூச்சை வேகமாக வெளியிட்டு ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். இதனால் அந்த வேலையை சிறப்பாக செய்வீர்கள் என்கிறார்கள் இஸ்ரேல் நாட்டின் வான்மான் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் ஆய்வாளர்கள். கனமான பொருட்களை தூக்கும் போதோ, படிகள் வழியாக மேலே ஏறும் போதோ இதை முக்கியமாக செய்ய வேண்டும். மார்பு நன்கு விம்மி விரிந்து சுருங்குமாறு 20 முதல் 30 மூச்சுகள் விட தினசரி பழகிக்கொள்ள வேண்டும். இதனால் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும்.

உங்களிடத்தில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள், எரிச்சல், குற்ற உணர்வு போன்ற அனைத்தையும் விரட்டும் ஆற்றல் மூச்சுப் பயிற்சிக்கு உண்டு என்கிறார்கள் வாரன் ஆல்பர்ட் மெடிக்கல் ஸ்கூல் ஆராய்ச்சியாளர்கள்.

தினமும் காலையில் படுக்கையை விட்டு எழும் முன் 5 நிமிடங்கள் ஆழ்ந்த மூச்சின் மூலம் சுவாசித்தல் போதும், அது அன்றைய நாளுக்கு தேவையான ஆக்ஸிஜனை சப்ளை செய்து கொண்டே இருக்கும். ஆழ்ந்த சுவாசம் இயற்கையான வலி நிவாரணியாக செயல்படுகிறது என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. நம் உடலில் உருவாகும் 70 சதவீத நச்சுக்களை நன்கு சுவாசித்தல் மூலமாக வெளியேற்ற முடியும் என்கிறார்கள்.

ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை அல்லது அதற்கு முன்னர் ஆழ்ந்து மூச்சு விடவில்லை என்றால் நுரையீரலிலுள்ள, ‘அல்வியோலி’ (alveoli) எனும் நுரையீரல் காற்றுப் பைகள் கொஞ்சம் கொஞ்சமாக பாதித்து நுரையீரல் பாதிப்பு ஏற்படும். அதனால் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை ஆழ்ந்து சுவாசியுங்கள் என்கிறார்கள் ‘நேச்சர்’ ஆய்வு பத்திரிகை விஞ்ஞானிகள்.

உங்கள் இதயத் துடிப்பு சீராக இயங்குவதற்கு நாள்தோறும் இரண்டு முறை ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் செய்யுமாறு அமெரிக்க மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். காலையில் எழுந்ததும், இரவில் படுக்கும் முன்பு என இரண்டு முறை ஆழ்ந்த சுவாசப் பயிற்சி செய்யுங்கள்.

குளிர் காலத்தில் முறையான சுவாசம் முக்கியம். நுரையீரல் நமது உடலில் உள்ள ஒரு மிக முக்கியமான உறுப்பு ஆகும். அது முறையாக, அதே நேரத்தில் சரியாக இயங்க வேண்டும். அதற்கு முறையான சுவாசப் பயிற்சி முக்கியம். ஆழமாக மூச்சை இழுத்து விடும்போது அது உடல் மற்றும் மூளையில் உள்ள அழுத்தத்தை குறைத்து நம்மை தளர்வாக வைத்திருக்கிறது என்கிறது ஆய்வு.

குளிர் காலத்தில் அதிகாலையில் மூச்சுப் பயிற்சி செய்வதால் உடல் சுறுசுறுப்பாக இயங்கும். குளிர் காலத்தில் மூட்டு வலி விரைப்பு தன்மையால் அதிகரிக்கும். மூச்சுப்பயிற்சி செய்வதால் இரத்த ஓட்டம் அதிகரித்து மூட்டு விறைப்பு தன்மை குறையும்.

மூச்சுப் பயிற்சியில் இழுக்கப்படும் தூய காற்று நுரையீரல் உள்ளே செல்லும்போது சூடாகி சுவாச அமைப்பை உறுத்தும் ஒவ்வாமை பிரச்னையை சரி செய்யும், சுவாச மண்டலத்தையும், நரம்பு மண்டலத்தையும் வலுப்பெற உதவும். மூச்சுப்பயிற்சி மூலம் நுரையீரலின் காற்றின் கொள்ளளவு அதிகரிக்கிறது, மூளையில் சுரக்கும் ஹார்மோன்கள் நன்றாக வேலை செய்ய உதவுகிறது, உடல் வெப்பநிலையை சீராக்குகிறது. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது.

இதையும் படியுங்கள்:
குல்ஃபா கீரையிலிருக்கும் குளு குளு நன்மைகள் தெரியுமா?
ஆழ்ந்த சுவாசம்

சமச்சீரற்ற ஹார்மோன் பிரச்னை இப்போது பலருக்கு தொல்லை கொடுத்து வருகிறது. இதனை சரிசெய்ய தினமும் இரண்டு முறை ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி செய்தாலே சரியாகிவிடும் என்கிறார்கள். இரவின் நிம்மதியான தூக்கத்திற்கும் அது உதவும். ஆழ்ந்த சுவாசம்தான் மனதை இலகுவாக வைக்க உதவுகிறது. தேர்வுகளுக்கு அல்லது வேலைக்கான நேர்முக தேர்வுக்கு முன் மூச்சுப்பயிற்சி செய்வது தேவையற்ற பதற்றத்தை தவிர்க்கும் என்கிறார்கள் இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள்.

உங்கள் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டிய மூன்று முக்கிய பழக்கங்கள், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் ஆற்றல், ஒருமுக சிந்தனை, மனோபலத்தை அதிகரித்தல். இந்த மூன்றையும் அவர்களிடம் எளிதாக சேர்க்க அவர்களை ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி செய்ய பழக்க வேண்டும் என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com