திணையரிசியில் பீட்டா கரோட்டின் உள்ளதால், இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை மேம்படுவது மட்டுமல்லாமல் தலைமுடியின் வளர்ச்சி அதிகரிக்கும். இதில் கால்சியம், புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, ஆண்டி ஆக்ஸிடன்ட் போன்றவை அதிகம் உள்ளது. மலச்சிக்கலை சரி செய்து ஜீரணத்திற்கு உதவும், மலட்டு தன்மையை போக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கும். திணையரிசியில் இன்னும் எண்ணற்ற பயன்கள் உள்ளது. அத்தகைய திணையரிசியில் கிச்சடியை வீட்டிலேயே சுவையாக செய்யலாம்.
தேவையான பொருட்கள்;
திணையரிசி -1கப்.
கடுகு-1/4 தேக்கரண்டி.
உளுத்தம் பருப்பு-1/4 தேக்கரண்டி.
பட்டை- சிறிதளவு.
கிராம்பு- சிறிதளவு.
நறுக்கிய பச்சை மிளகாய்-1
வரமிளகாய்-1
நறுக்கிய சின்ன வேங்காயம்-1 கப்
தக்காளி-1 கப்.
கருவேப்பிலை-சிறிதளவு.
புதினா-சிறிதளவு.
இஞ்சி பூண்டு பேஸ்ட்-1/4 தேக்கரண்டி.
மஞ்சள் தூள்- 1 சிட்டிகை.
கரம் மசாலா-1/4 தேக்கரண்டி.
நறுக்கிய கேரட்-1 கப்.
பட்டாணி -1 கப்.
நெய்- 1 தேக்கரண்டி.
உப்பு- தேவையான அளவு.
கொத்தமல்லி- சிறிதளவு.
எண்ணெய்- தேவையான அளவு.
செய்முறை விளக்கம்;
முதலில் 1 கப் திணையரிசியை எடுத்து தண்ணீர் ஊற்றி ¼ மணி நேரம் ஊற வைக்கவும்.
இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் சிறிது விட்டு கடுகு ¼ தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு ¼ தேக்கரண்டி, பட்டை, கிராம்பு, பச்சை மிளகாய் 1, வரமிளகாய் 1, கருவேப்பிலை , புதினா, நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை 1 கப் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கி வைத்திருக்கும் 1 கப் தக்காளியை சேர்த்து வதக்கவும். அத்துடன் ¼ தேக்கரண்டி இஞ்சி புண்டு பேஸ்ட், 1 சிட்டிகை மஞ்சள் தூள், ¼ தேக்கரண்டி கரம் மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு நறுக்கி வைத்திருக்கும் கேரட் 1 கப் மற்றும் 1 கப் பட்டாணியை சேர்த்து அதையும் 2 நிமிடம் வதக்கிய பிறகு 1 கப் திணையரிசிக்கு 3 கப் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீரை நன்றாக கொதிக்க விடவும்.
பிறகு ஊற வைத்திருந்த திணையரிசியை அத்துடன் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து திணை அரிசியை நன்றாக வேக விடவும். திணையரிசி முக்கால் பதம் வெந்த பிறகு கொத்தமல்லி சிறிது தூவி மூடியை போட்டு மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும். கடைசியாக ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து இறக்கவும். இப்போது ஆரோக்கியம் மிகுந்த சுவையான திணையரிசி கிச்சடி தயார்.