நயாகரா நீர்வீழ்ச்சியை வற்ற வைத்ததன் காரணம் தெரியுமா?

நயாகரா நீர்வீழ்ச்சி
நயாகரா நீர்வீழ்ச்சி

லகில் உள்ள பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சிகளுள் நயாகரா நீர்வீழ்ச்சியும் ஒன்றாகும். இது யுனைடெட் ஸ்டேட்ஸையும், கனடாவையும் பிரிக்கும் இயற்கையான எல்லை என்றே சொல்லலாம். இந்த நயாகரா நீர்வீழ்ச்சியில் மூன்று அருவிகள் சேர்ந்திருக்கிறது, ஹார்ஸ் ஷூ அருவி, அமெரிக்கன் அருவி, பிரைடல் வெயில் அருவி ஆகியவையாகும்.

நயாகரா நீர்வீழ்ச்சி பிரபலமடைந்ததற்கு முக்கிய காரணம், அதிலிருந்து விழும் தண்ணீரின் அளவேயாகும். நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து ஒவ்வொரு நொடிக்கும் 3,160 டன் தண்ணீர் விழும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நீர்வீழ்ச்சி 12,500 வருடங்களுக்கு முன்பு உருவாகியது என்று கூறுகிறார்கள்.

நயாகரா அருவியை நம்பியே அதை சுற்றியுள்ள மக்களின் வாழ்வாதாரம் இருக்கிறது. குடிநீர், மீன்பிடிப்பது, போட்டிங், மின்சாரம், சுற்றுலா என்று நயாகரா நீர்வீழ்ச்சி அவர்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது.

இப்படிப்பட்ட நீர்வீழ்ச்சியைத்தான் 1969ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர்கள் வற்ற வைத்தார்கள். சாதாரணமாக எப்போதுமே ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஆற்றையோ, அருவியையோ நிறுத்த வேண்டும் என்றால் அணை கட்டியே தண்ணீரை தடுத்து நிறுத்த முடியும். ஆனால் நயாகராவில் அவ்வாறு செய்ய முடியாது. ஏனெனில் நீர்வரத்தும், நீரின் வேகமும் மிகவும் அதிகமாகும்.

எனவே எப்படி தண்ணீரை தடுத்து நிறுத்துவது என்று யோசித்தவர்களுக்கு ஒரு யோசனை தோன்றியது. அதுதான் டன் கணக்கில் கற்களை எடுத்து வந்து கொட்டி தண்ணீரை தடுத்து நிறுத்துவதாகும். இதை இதற்கு முன்பே  எங்கேயோ கேட்டது போல தோன்றுகிறதல்லவா?

ஆமாம். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஆற்றின் வேகத்தை குறைக்க கற்களை கொண்டு தண்ணீரின் வேகத்தை தடுத்து கல்லணையை கட்டினார் கரிகால சோழன். அதே முறையைத்தான் இங்கேயும் பயன்படுத்துகிறார்கள். ஜூன் 12, 1969 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 28,000 டன் பாறைகளை 1200 டிரக்களில் கொண்டு வந்து கொட்டியுள்ளார்கள். இப்படி பாறைகளை கொட்டியதும் அமெரிக்க பக்கம் இருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி வற்றிப்போகச் செய்கிறது. இதனால் அங்கிருக்கும் மக்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. ஏனெனில் தண்ணீர் பெருக்கு மற்ற இடங்களில் அதிகரித்து விடும் என்று நினைத்தனர். அதுமட்டுமில்லாமல் இப்படி வறண்டிருக்கும் நயகராவை பார்க்கும் சுற்றுலாப் பயணிகளும் அச்சப்படுவார்கள் என்று நினைத்தனர். ஆனால் நடந்தது வேறாகும்.

நயாகரா நீர்வீழ்ச்சி வறண்டு கிடக்க்கும் காட்சி.
நயாகரா நீர்வீழ்ச்சி வறண்டு கிடக்க்கும் காட்சி.

நயாகரா நீர்வீழ்ச்சி வறண்டு விட்டது என்பதை கேள்விப்பட்ட மக்கள் கூட்டம் கூட்டமாக அதை காண்பதற்கு வந்தார்களாம். முன்பு நயாகராவை சுற்றிப்பார்க்க வந்த கூட்டத்தை விட இப்போது வந்த கூட்டம் மிக அதிகமாம்.

நயாகராவை வற்ற வைத்த பிறகு ஆராய்ச்சியாளர்கள் செய்த முதல் காரியம், அதில் இருந்த தேவையற்ற பொருட்களை சுத்தம் செய்வதேயாகும். முதலில் நயகராவில் உள்ள நாணயங்களை அப்புறப் படுத்தினார்கள். நயாகராவை காண வரும் சுற்றுலாப்பயணிகள், அதிலே போட்டு சென்ற நாணயங்கள் எக்கச்சக்கமாக இருந்ததாம். அதையெல்லாம் அப்புறப்படுத்திய பிறகு அங்கேயிருக்கும் பாறைகளை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார்கள். தண்ணீர் வந்து விழக்கூடிய அந்த பாறைகளை ஆராய்ச்சி செய்வதற்காகவே நயாகராவை வற்ற வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இன்னும் எத்தனை காலங்கள் இந்த பாறைகள் தண்ணீரால் ஏற்படும் அழுத்தத்தை தாங்கி கொண்டு இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் இப்பாறைகள் ஒருவேளை சிதைவுற நேர்ந்தால் பெரிய காட்டாற்று வெள்ளம் உருவாக வாய்ப்பிருக்கிறது. அதனால் அந்த பாறைகளை  பற்றி தெரிந்து கொள்ளவே விஞ்ஞானிகள் விரும்பினார்கள்.

இதையும் படியுங்கள்:
ஆலப்புழா படகு வீடு ஒரு நாள் ரம்யமான பயணம்! மறக்க முடியாத அனுபவம்!
நயாகரா நீர்வீழ்ச்சி

நயாகரா நீர்வீழ்ச்சியில் பாறைகளில் ஆங்காங்கே துளையிட ஆரமித்தனர். அதனுடைய பிரஷர், ஸ்ட்ரெஸ், வலிமை எல்லாவற்றையும் பற்றி சேகரிக்க ஆரமித்தனர். அந்த பாறைகளில் அசைவு இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்வதற்காக பாறைகளில் நிறைய இடங்களில் கேபில்களை செட் செய்தார்கள். விஞ்ஞானிகளின் எல்லா வேலைகளும் முடிந்ததும் அவர்கள் மேற்பரப்பிற்கு வந்து விடுகிறார்கள். பிறகு போட்டு வைத்திருந்த பாறைகளை கொஞ்சம் கொஞ்சமாக அப்புறப்படுத்தி மறுபடியும் நயாகரா நீர்வீழ்ச்சியை ஓட விடுகிறார்கள். இந்த காரணத்திற்காக தான் 1969ல் நயாகராவை விஞ்ஞானிகள் வற்ற செய்தார்கள்.

வரலாற்றில் இப்படி ஒரே ஒருமுறை தான்  நயாகரா வற்றியிருக்கிறதா? என்று கேட்டால் அது தான் இல்லை. இப்போது விஞ்ஞானிகள் பாறைகளை போட்டு நயகராவை வற்ற செய்தனர். ஆனால் இயற்கையாகவே நயாகரா நீர்வீழ்ச்சி ஒருமுறை உறைந்து போனது என்றே சொல்ல வேண்டும். மார்ச் 28, 1848 ஆம் ஆண்டு நயாகரா நீர்வீழ்ச்சி முழுமையாக உறைந்து போனது. ஆனால் இது அதிக நாட்கள் நீடிக்கவில்லை 2 நாட்களில் திரும்பவும் தண்ணீர் வர தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை கேட்பதற்கு ஆச்சர்யமாகவும், நம்ப முடியாத வண்ணம் இருந்தாலும் இது வரலாற்றில் நடந்த ஒரு புகழ் பெற்ற நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com