1. மாவைப் பிசைந்து 10 -15 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.
2. நிச்சயமாக அரை மணி நேரம் ஊற வேண்டும். அதிகம் ஊறினால் தவறில்லை. அப்படி 10 நிமிடத்தில் அவசரமாகச் செய்ய வேண்டும் என்றால் பிசைய தேவைப்படும் இளஞ்சூடு நீரைக் குறைத்து, பழைய சாத நீரை சிறிது சேர்த்துப் பிசைந்து 10 நிமிடம் ஊறினால் போதும் சீரகம் போடுவதால் நீராகாரத்தின் புளிப்பு நம் உடலைப் பாதிக்காது.
3. டைட்டாக மூடிய பாத்திரத்தில் பிசைந்த மாவை ஊறவைக்கவும் காற்று பட்டால் வறண்டு சப்பாத்தி அழகாக வட்டமாக இடமுடியாமல் போய்விடும்.
4. பிசைந்த மாவை இடும்போது கோதுமை மாவில் முழுவதுமாக இரு பக்கமும் தோய்த்து இட வேண்டும் இதனால் திக்னெஸ் ஒரே மாதிரியாக இருக்கும்.
5.இடும் போது மாவு மடங்காமலும், நடுவில் ஓட்டை விழாமலும் இருக்க வேண்டும்.
6. தோசை திருப்பியையோ, ஜார்ணியையோ செங்குத்தாக வைத்து சப்பாத்தியை தவாவின் மேல் இருக்கும்போது சுற்றவோ அல்லது அழுத்தம் கொடுக்கவோ கூடாது. பின் ஓட்டை விழுந்து சப்பாத்தி உப்பலாக வராது.
7. சப்பாத்தி நன்றாக உப்பலாக வந்தாலே நன்றாக வெந்ததாக அர்த்தம். இப்படி சுட்ட சப்பாத்தி ஒரு வாரம் வரை கெடாது.
8. இருபுறமும் ரோஸ்ட் செய்தபின் சுடும் முறை சொல்லப்பட்டிருக்கும் முறையில் எண்ணெய் விட்டுச் செய்தால் கண்டிப்பாக மிருதுவாகவும், நேரமான பின் கடினமாக ஆகாமலும் இருக்கும்.
9. மாவை சலிக்காமல் சப்பாத்தி செய்தால் நல்லது.
10. மாவில சோடா உப்பு சேர்த்துப் பிசைய வேண்டி அவசியம் இல்லை. வயிற்றுப் பிரசனை உள்ளவர்களுக்கு மிகவும் சிரமமாகி விடும். சோடா இல்லாமலேயே ஸாஃப்ட் சப்பாத்தி செய்யலாம்.
11. ஃபுல்கா, பாக்ரி, காக்ரா வகை சப்பாத்திகளை சுடும்போது எண்ணெய் விடாமல் செய்ய வேண்டும் டபுள் ரோடியில் உள்பக்கம் மட்டும் எண்ணெய் தடவி மாவில் தோய்த்து. இட்டபின் எண்ணெய் விடாமலே இரு பக்கமும் ஒரே மாதிரி கருகாமல் சுட்டெடுக்க வேண்டும். மற்ற வகை சப்பாத்திகளுக்கு எண்ணெயெ விட்டு சுட்டால் மட்டுமே மசாலாவுடன் சேர்ந்து சூப்பர் சுவையைக் கொடுக்கும்.
குறிப்பு: வெளியூர்ப் பயணம் மேற்கொள்ளும்போது சப்பாத்தி செய்து எடுத்துகொள்ளும்போது கிலோ மாவுக்குத் தேவையான உப்பு, மசாலா சேர்த்து மீடியம் சைஸ் கரண்டிக்கு 6 - 7 குழிக்கரண்டி எண்ணெய் சேர்த்துப் பிசைந்து சப்பாத்திகளை நன்றாக ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு சுட்டெடுத்து இரு பக்கமும் நன்றாக ரோஸ்ட் ஆனதும் ஒரு பெரிய சைஸ் பேப்பரின் மேல் போட்டு நன்றாக ஆறிய பின் 'பாக்' செய்தால் பூசன பூக்காமல் ஒரு வாரம் உறுதியாக இருக்கும்.