

தண்ணீர் என்பது மனித வாழ்க்கையில் அமிர்தத்திற்கு ஒப்பாகும். பொதுவாக மனிதர்கள் தாகம் எடுக்கும்போது மட்டும் தண்ணீர் அருந்தவேண்டும் என்ற கொள்கையை வைத்துள்ளனர்.
இப்போது வளர்ந்து வரும் நாகரிக போக்கினால் தாகம் ஏற்படும் போது செயற்கை குளிர்பானங்களை அருந்து கின்றனர். இத்தகைய செய்கை குளிர்பானங்கள் வயிற்றில் உள்ள செல்களின் நீர்ச்சத்தினை உறிஞ்சி, ஜுரண மண்டலத்தின் தன்மையை பாதிக்கின்றன. இதனால் குளிர்பானங்கள் அருந்தும்போது தாகம் அதிகரிக்குமே தவிர ஒருபோதும் குறையாது.
குளிர்பானங்கள் தவிர டீ, காபி ஆகியவை குடிப்பதும் தாகத்தினை அதிகரிக்கும். பாயாசம் குடித்தாலும் அது அதிக அளவில் நீர் சத்தினை வயிற்றிலிருந்து உறிஞ்சும். அதனை சமன்படுத்தலும் அடுத்தடுத்து நிகழ்வதால் ஜீரண மண்டலத்தில் கோளாறுகள் ஏற்படுகின்றன. இதனை கேஸ் டிரிபிள் என்று நினைத்து அதற்கு மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள். எனவே என்றும் சிறந்தது தூய நீர் மட்டுமே.
உடலின் 60 முதல் 70 சதவீதம் பாகங்கள் நீரால் ஆனது. தமது எலும்பு உள்பட அனைத்து பாகங்களும் நீர் சத்தினை கொண்டுள்ளது. உடலின் நீர் சத்து குறைவாக இருக்கும்போது மூளையில் உள்ள செல்கள் நீர்சத்தினை இழப்பதால் மனிதனுக்கு ' கோமா' நிலை தோன்றும். மனிதன் உணவின்றி நீண்ட நாட்கள் வாழ முடியும். ஆனால், நீரின்றி வாழ் முடியாது.
ஜீரண மண்டலத்தின் வேதியியல் செயல்பாட்டிற்கும், உடலின் எடை சரியான அளவில் இருப்பதற்கும், இரத்த ஓட்டத்தின் மூலமாக தாது உப்புக்களும், ஆக்ஸிஜனும் உடலின் பாகங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுவதற்கும், உடலின் கொழுப்பு சத்து மிகாமல் இருப்பதற்கும் தூய குடிநீரே அவசியம்.
ஒரு நாளில் ஒரு டயட் சோடா கேன் கூட குடிப்பது மிகவும் அபாயராமனது என புதிய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. இவ்வாறு அருந்துவது அல்கஹால் சாராத கொழுப்பு கல்லீரல் நோய் (Non-Alcoholic Fatty Liver Disease – NAFLD) ஏற்படும் அபாயத்தை 60% வரை அதிகரிக்கக்கூடும் என புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை, சர்க்கரை நிறைந்த பானங்களைப் பருகுவது 50% வரை அபாயத்தை உயர்த்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பார்க்கும் வேலையில் அதிக கவனம் செலுத்த அடிக்கடி தண்ணீர் குடிப்பது உதவும் என்கிறார்கள் பிரிட்டன் ஆய்வாளர்கள். ஒவ்வொரு முறையும் வியர்க்கும்போதும் இழக்கும் நீரின் அளவை சரிப்படுத்தும் வகையில் அடிக்கடி தண்ணீர் அருந்துவது நல்லது. அவ்வாறு செய்யாவிட்டால் தலைவலி, வேலையில் கவனமின்மை, தசைப்பிடிப்பு என்று பல பிரச்னைகள் எழும் என்கிறார்கள்.
மலச்சிக்கல், அஜீரணம், தூக்கமின்மை, உடல் சூடு இவைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்க குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 1.8 லிட்டர் தண்ணீராவது பருகவேண்டும். சாப்பிடுவதற்கு முன்பு, சாப்பிட்ட பிறகு, உறக்கத்திற்கு முன்பு, உறக்கத்தில் எழும்போது, தூங்கி எழுந்ததும் என எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் குடிக்கலாம். ஆனால், கடுமையான பசியின்போது மட்டும் தண்ணீர் குடிப்பது தவறு.
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும்போது, சிறுநீரகத்தின் செயல்பாடு தூண்டப்பட்டு, உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேற்றப்படுகின்றன. இது உடலை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. இது உடல் உறுப்புகள் சீராக செயல்படவும், சுறுசுறுப்பாக உணரவும் உதவுகிறது.சிறுநீர் கழித்த உடனேயே தண்ணீர் குடிக்கக் கூடாது. இது சிறுநீரகத்தில் கற்களை உருவாக்குவதற்கு காரணமாகிறது.
தினமும் 8 டம்ளர் தண்ணீர் அவசியம்தான். அதற்காக அளவுக்கு அதிகமாகவும் தண்ணீர் குடிக்க கூடாது. அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் தண்ணீர் உடலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்துவதுடன் சோடியம் உப்பு குறைந்து உடலில் ஒரு மந்தநிலையை ஏற்படுத்தும் என்கிறார்கள் ஆஸ்திரேலிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
தண்ணீரின் மகத்துவம் தெரிந்துதான் ஐ.நா சபை 2025 ஆம் ஆண்டிற்கான உலக உணவு தினத்தின் கருப்பொருளாக "தண்ணீர்தான் வாழ்க்கை, தண்ணீர்தான் உணவு." என கூறுகிறது.