வாய விட்டு மாட்டிக்காதீங்க! இந்த 5 நேரத்துல அமைதியா இருந்தா நீங்கதான் கெத்து!

Silent
Silent
Published on

நம்ம வாழ்க்கையில எத்தனையோ தடவை, கோவத்துலயோ அவசரத்துலயோ எதையாவது பேசிட்டு, அப்புறமா "ப்ச்ச, இப்படி சொல்லிருக்கக் கூடாதோ, கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாமோ"ன்னு வருத்தப்பட்டிருப்போம், இல்லையா? 

ஜீனோன்னு ஒரு கிரேக்க ஞானி சொன்ன மாதிரி, "கால் தடுக்கி விழுவது பரவாயில்லை, ஆனால் நாக்கு தடுக்கி விழுவது ஆபத்தானது". ஏன்னா, நம்ம வாயிலிருந்து வர்ற வார்த்தைகள் சில சமயம் பெரிய பிரச்சனைகளைக் கொண்டு வந்துடும். ஆனா, சில நேரங்கள்ல பேசாம அமைதியா இருக்கிறது, பேசுறதை விட பல மடங்கு சக்தி வாய்ந்ததா இருக்கும்னு ஸ்டோயிக் தத்துவ ஞானிகள் சொல்றாங்க. எந்த மாதிரி சூழ்நிலைகள்ல அந்த அமைதி நமக்குக் கைகொடுக்கும்னு வாங்க தெரிஞ்சுக்கலாம்.

1. கோபத்தைக் கையாளும் போது!

நம்மள யாராவது கோபப்படுத்திட்டா, உடனே பதிலுக்குக் கத்துறது, இல்ல கோவமா பேசிடுறது இயல்புதான். ஆனா, அப்படி செய்யும்போது பிரச்சனை பெருசா ஆகுமே தவிர, குறையாது. அதுக்குப் பதிலா, அந்த நேரத்துல கொஞ்சம் அமைதியா இருந்துட்டா, நம்ம கோபம் கொஞ்சம் தணியும். என்ன பேசணும், எப்படிப் பேசணும்னு நிதானமா யோசிக்க நேரம் கிடைக்கும். தேவையில்லாத சண்டைகளையும், மனஸ்தாபங்களையும் தவிர்க்கலாம். 

2. வதந்திகளைக் கையாளும் போது!

உங்களைப் பத்தி யாராவது தப்புத் தப்பா பேசுறாங்க, இல்ல வதந்திகளைப் பரப்புறாங்கன்னு வச்சுக்கோங்க. உடனே போய், "நான் அப்படி இல்ல, இது பொய்"ன்னு நீங்க விளக்கம் கொடுக்க ஆரம்பிச்சா, அது எரியுற நெருப்புல எண்ணெய் ஊத்துற மாதிரி ஆகிடும். ஏன்னா, அந்த நேரம் எல்லாரும் அந்த வதந்தியிலதான் ஆர்வமா இருப்பாங்க, நீங்க சொல்றதை நம்ப மாட்டாங்க. அதுக்குப் பதிலா, அமைதியா இருந்துடுங்க. 

3. உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு இல்லாத போது!

நீங்க ஒரு முக்கியமான விஷயத்தைப் பேசிட்டு இருக்கும்போது, மத்தவங்க அதைக் கவனிக்காம, அலட்சியப்படுத்துறாங்க, இல்ல கிண்டல் பண்றாங்கன்னா, அவங்க கவனத்தைத் திருப்பணும்னு நீங்க கத்திப் பேசுறதாலயோ, கோபப்படுறதாலயோ எந்தப் பிரயோஜனமும் இல்லை. அந்த இடத்துல, டக்குன்னு பேச்சை நிறுத்திட்டு அமைதியா இருங்க. அந்த திடீர் அமைதி, அவங்க கவனத்தை உங்க பக்கம் திருப்பும். 

4. மற்றவர்கள் தங்களைப் பற்றியே பெருமையாகப் பேசும்போதோ அல்லது உங்களை அவமதிக்கும்போதோ!

சில பேர் இருப்பாங்க, எப்பப் பார்த்தாலும் தங்களைப் பத்தியே பெருமையா பேசிட்டு இருப்பாங்க, "நான் அதைச் செஞ்சேன், இதைச் செஞ்சேன்"னு தம்பட்டம் அடிப்பாங்க. இல்லைன்னா, உங்களை மட்டம் தட்டி, அவமானப்படுத்துற மாதிரி பேசுவாங்க. இந்த மாதிரி நேரத்துல, நீங்களும் பதிலுக்குப் பெருமை பேசினாலோ, இல்ல அவங்க அவமானத்துக்கு கோபமா எதிர்வினை ஆற்றினாலோ, அவங்க எதிர்பார்த்தது நடந்துடும். நீங்க அமைதியா, சின்னதா ஒரு புன்னகையோட அதைக் கடந்து போயிட்டீங்கன்னா, அது அவங்களை ரொம்பவே பாதிக்கும். 

இதையும் படியுங்கள்:
1 கிலோ தங்கம் = 1 ரூபாயா? பூமிக்கு வரப்போகும் ரூ.83,000 லட்சம் கோடி ஜாக்பாட்!
Silent

5. கவனச்சிதறல்கள், அடுத்தவரைக் குறை சொல்லும் எண்ணம், பெருமை போன்ற உணர்வுகள் வரும்போது!

நான்கு துறவிகள் அமைதியா தியானம் செஞ்சுகிட்டு இருக்கும்போது, ஒருத்தர் மெழுகுவர்த்தி அணையப் போகுதேன்னு கவனச்சிதறலால பேச, இன்னொருத்தர் அவரைத் திருத்தப் பேச, மூணாவது ஆள் கோவத்துல பேச, நாலாவது ஆள் "நான் மட்டும்தான் பேசாம இருந்தேன்"னு பெருமையில பேச, கடைசியில எல்லாரும் பேசிடுறாங்க. இதுலேருந்து என்ன தெரியுதுன்னா, கவனச்சிதறல், மத்தவங்கள திருத்தணும்ங்கிற எண்ணம், கோபம், பெருமை மாதிரி விஷயங்கள் நம்ம அமைதியைக் குலைக்க முயற்சி பண்ணும். இந்த மாதிரி உணர்வுகள் வரும்போதும், அமைதியைக் கடைப்பிடிக்கப் பழகிக்கணும்.

இதையும் படியுங்கள்:
ஒருவர் தன் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்க அனுமதி..? வெளியான முக்கிய தகவல்..!
Silent

பேச்சு வெள்ளி மாதிரி இருக்கலாம், ஆனா மெளனம் சில நேரங்கள்ல தங்கம் மாதிரி. அது நம்ம மனசைக் கட்டுப்படுத்த, நம்ம சுயமரியாதையைக் காப்பாத்திக்க, பிரச்சனைகளைத் தவிர்க்க ஒரு சக்தி வாய்ந்த கருவி. எல்லா நேரமும் அமைதியா இருக்கணும்னு அவசியம் இல்லை. ஆனா, இந்த மாதிரி முக்கியமான சூழ்நிலைகள்ல கொஞ்சம் யோசிச்சு, நிதானமா, அமைதியைக் கடைப்பிடிச்சா, நம்ம வாழ்க்கை இன்னும் கொஞ்சம் நிம்மதியா, பிரச்சனைகள் இல்லாம இருக்கும். நீங்களும் முயற்சி பண்ணிப் பாருங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com